முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள் விளையாட்டு

உலக மகளிர் குத்துச் சண்டை சாம்பியன்ஷிப் போட்டி; இறுதி சுற்றுக்கு இந்தியாவின் நீது காங்கஸ் முன்னேற்றம்

உலக மகளிர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் நீது காங்கஸ் இறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

உலக மகளிர் குத்துச் சண்டை சாம்பியன்ஷிப் போட்டிகள் தலைநகர் டெல்லியில் நடந்து வருகின்றன. இன்று அரையிறுதி சுற்றுக்கான போட்டிகள் நடைபெற்றது. இதில் 48 கிலோ எடை பிரிவில் இன்று நடந்த அரையிறுதி போட்டி ஒன்றில் இந்திய வீராங்கனை நீது காங்காஸ் மற்றும் கஜகஸ்தான் வீராங்கனை அலுவா பல்கிபெளோவாவை எதிர்த்து  விளையாடினர்.இந்த போட்டியில், முதல் சுற்றில் ஆதிக்கம் செலுத்திய கஜகஸ்தான் வீராங்கனை 2-3 என்ற புள்ளி கணக்கில் முன்னிலை பெற்றார். எனினும், 2-வது சுற்றில் நீது அதிரடியாக தாக்குதல் முறையை கையாண்டார். கடைசி 3 நிமிடங்களில் நீது தொடர்ந்து அதிரடியாக விளையாடினார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்த போட்டியின் முடிவில் நீது 5-2 என்ற புள்ளி கணக்கில் முன்னிலை பெற்று வெற்றி பெற்றார். இதனை அடுத்து இந்திய வீராங்கனை நீது இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளார். இதனால், பதக்கம் கிடைப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

இணையத் தொடராக தயாராகும் ‘பொன்னியின் செல்வன்’

Halley Karthik

கனமழை எச்சரிக்கை; தஞ்சையில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

G SaravanaKumar

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு ; 61 பேர் காயம்

Web Editor