உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் : அரையிறுதிக்கு முன்னேறி பதக்கதை உறுதி செய்தார் எச்.எஸ்.பிரனாய்!

உலக பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீரர் எச்.எஸ்.பிரனாய்அரையிறுதி சுற்றுக்கு முன்னேறி பதக்கத்தை உறுதி செய்தார்.  28-வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி டென்மார்க் தலைநகர் ஹோபன்ஹேகன் நகரில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற ஆண்கள்…

உலக பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீரர் எச்.எஸ்.பிரனாய்அரையிறுதி சுற்றுக்கு முன்னேறி பதக்கத்தை உறுதி செய்தார். 

28-வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி டென்மார்க் தலைநகர் ஹோபன்ஹேகன் நகரில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் காலிறுதி போட்டியில் இந்திய வீரரும், தரவரியில் 9 வது இடம் வகிக்கும் எச்.எஸ்.பிரனாய் டென்மார்க் வீரர் ஆக்சல்சென்னை சந்தித்தார். இவர் தரவரிசையில் முதல் இடத்தில் உள்ளவர்.

முதல் செட்டை பிரனாய் 13-21 இழந்தாலும், அடுத்த இரு செட்களை 21-15, 21-16 கைப்பற்றி ஆக்சல்சென்னுக்கு அதிர்ச்சி அளித்தார். இந்த வெற்றியின் மூலம் அரை இறுதிக்குள் நுழைந்த அவருக்கு பதக்கம் உறுதியாகியுள்ளது.

முன்னதாக இரட்டையர் பிரிவில் தரவரிசையில் 2-வது இடம் வகிக்கும் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ரங்கி ரெட்டி- சிராக் ஷெட்டி ஜோடி கால்இறுதியில் டென்மார்க்கின் கிம் ஆஸ்ட்ரப்- ஆன்டர்ஸ் ஸ்காரப் ரஸ்முசென் இணையிடம் 18-21, 19-21 என்ற நேர் செட்டில் தோல்வி அடைந்து வெளியேறியது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.