காவல்துறை செயல்பாடுகள்தான் அரசுக்கு நற்பெயரை பெற்று தரும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சட்டம் ஒழுங்கு குறித்து 4 மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார். நாகை மாவட்டத்தில் 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள முதலமைச்சர், சட்டம் ஒழுங்கு குறித்து ஆட்சியர் அலுவலகத்தில் உயரதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
இதில், நாகை, திருவாரூர் தஞ்சாவூர், மயிலாடுதுறை ஆகிய 4 மாவட்ட ஆட்சியர்கள், எஸ்பிக்கள் மற்றும் டிஜிபி சங்கர் ஜிவால், சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி அருண் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ஆலோசனைக் கூட்டத்தில் உரையாற்றிய அவர், ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை குறைதீர்ப்பு கூட்டம் நடத்த வேண்டும் என காவல் கண்காணிப்பாளருக்கு அறிவுறுத்தினார். போதைப் பொருள் விற்பனை செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சட்டம் ஒழுங்கை காவல்துறையினர் ஒருங்கிணைந்து கண்காணிக்க வேண்டும் எனவும் முதலமைச்சர் ஆலோசனை வழங்கினார்.







