சவுதி அரேபியா : ஹெலிகாப்டர் விபத்தில் 14 பேர் உயிரிழப்பு!

சவுதி அரேபியாவில் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 14 பேர் உயிரிழந்துள்ளனர்.

சவுதி அரேபியாவின் முன்னணி எண்ணெய் நிறுவனமான அராம்கோவுக்கு சொந்தமான ஹெலிகாப்டர் அந்நாட்டின் ராஸ் டானுரா பகுதியில் விபத்தில் சிக்கியுள்ளது.. இந்த நிலையில் இன்று காலை 6 மணியளவில் அந்நிறுவனத்துக்கு சொந்தமான ஹெலிகாப்டர் மர்மமான முறையில் விபத்தில் சிக்கியுள்ளது. இந்த விபத்தில் ஹெலிகாப்டரில் இருந்த 14 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்கள் அனைவரும் சவுதி நாட்டை சேர்ந்தவர்கள் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த விபத்து குறித்து சவுதி அரேபியாவின் எரிசக்தி அமைச்சகம் வெளியிட்டுள்ள பதிவில், “ஹெலிகாப்டர் விபத்துக்கான காரணம் இன்னும் அறியப்படவில்லை. இது குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அமெரிக்க தாக்குதலால் அதிருப்தி அடைந்த ஈரான், பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக, இந்த ஹெலிகாப்டர் தாக்கப்பட்டதா என்ற கோணத்திலும் விசாரணை நடக்கிறது. விபத்து நடந்தப் பகுதிக்கு விரைந்து சென்ற மீட்புப் படையினர், மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். விமான விபத்துக்கான துல்லியமான காரணம் என்ன என்பது குறித்த தகவல் ஏதும் வெளியாகவில்லை.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.