முக்கியச் செய்திகள் இந்தியா விளையாட்டு

மகளிர் பிரீமியர் லீக்; மும்பை இந்தியன்ஸ் அணியின் டி-ஷர்ட் அறிமுகம்

மகளிர் பிரீமியர் லீக் தொடரில் பங்கேற்கும் மும்பை இந்தியன்ஸ் கிரிக்கெட் அணியின் டி ஷர்ட்டை அணி நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

கிரிக்கெட் வீரர்களுக்கு ஐபிஎல் தொடர் நடைபெறுவது போன்று வீராங்கனைகளுக்கு மகளிர் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் இந்த ஆண்டு தொடங்க உள்ளது. மார்ச் 4-ம் தேதி மகளிர் பிரீமியர் லிக் தொடங்க உள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதையும் படிக்கவும் : இந்திய அளவில் டிரெண்டிங்கில் மாஸ் காட்டும் மார்டின் டீசர்..!!

இந்த டி20 கிரிக்கெட் தொடரில் மொத்தம் 5 அணிகள் பங்கேற்கின்றன. 5 அணிகளும் 4 ஆயிரத்து 700 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளன. அதானி ஸ்போர்ட்ஸ் ஸ்லிங் நிறுவனம் அகமதாபாத் அணியை ரூ.1289 கோடிக்கும், இந்தியா வின் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் மும்பை இந்தியன்ஸ் அணியை ரூ.912.99 கோடிக்கும், ராயல் சேலஞ்சர்ஸ் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் பெங்களூரு அணியை ரூ.901 கோடிக்கும், JSW GMR கிரிக்கெட் நிறுவனம் டெல்லி அணியை ரூ.810 கோடிக்கும், கேப்ரி குளோபல் ஹோல்டிங்ஸ் நிறுவனம் லக்னோ அணியை ரூ. 757 கோடிக்கும் ஏலம் எடுத்துள்ளன.மகளிர் பிரீமியர் லீக்  கிரிக்கெட் தொடருக்கான ஒளிபரப்பு உரிமம் ரூ.951 கோடிக்கு ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ஏலம் எடுத்துள்ளது. இந்த தொடருக்கான டைட்டில் ஸ்பான்சர்ஷிப் உரிமத்தை டாடா நிறுவனம் பெற்றுள்ளது.

இந்நிலையில் மகளிர் மும்பை இந்தியன்ஸ் கிரிக்கெட் அணியின் டி ஷர்ட்டை அணி நிர்வாகம் வெளியிட்டுள்ளது. இந்த அணியில், இந்திய கிரிக்கெட் வீராங்கனைகள் ஹர்மன் ப்ரீத் கவுர், ஸ்மிருதி மந்தனா மற்றும் ஜெமிமா ரோட்ரிக்ஸ்  ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். மேலும் நியூசிலாந்தின் சோஃபி டிவைன் மற்றும் வெஸ்ட் இண்டீஸின் ஸ்டாபானி டெய்லர் போன்ற சர்வதேச நட்சத்திரங்களும் இடம்பெற்றுள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

தமிழக அமைச்சரவை கூட்டத் தேதி மாற்றம்

Web Editor

தூய குடிநீர் வழங்க நடவடிக்கை- சைதை துரைசாமி உறுதி!

Niruban Chakkaaravarthi

‘வாரிஸ் பஞ்சாப் டி’ தலைவர் அம்ரித்பால் சிங் தலைமறைவு; தேடுதல் வேட்டையில் போலீசார்

Jayasheeba