கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலில், மாசி கொடைவிழா ஒட்டி சந்தனகுட ஊர்வலம் நடைபெற்றுள்ளது. இதில் ஐந்நூறுக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றுள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டம், மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் மாசி கொடைவிழா நடைப்பெற்று வருகிறது. இவ் விழாவில் முக்கிய நிகழ்வான சந்தனகுட ஊர்வலம் இன்று நடைபெற்றது. இதில் பக்தர்கள் சந்தனம், களபம், குங்குமம் போன்ற பொருட்களை குடங்களில் நிரப்பி ஊர்வலமாக சென்றனர்.
மேலும் இந்த ஊர்வலம் உண்ணாமலை பகுதியில் இருந்து புறப்பட்டு, திக்குறிச்சி, சிராயங்குழி , திருவிதாங்கோடு மற்றும் திங்கள்சந்தை வழியாக சென்று மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலை சென்றடைய உள்ளது. இதை தொடர்ந்து சந்தனகுட ஊர்வலத்தில் ஐந்நூறுக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றுள்ளனர்.
-கோ. சிவசங்கரன்.







