மகளிர் ஐபிஎல் – கம் பேக் கொடுக்கும் மிதாலி ராஜ்

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மிதாலி ராஜ் மகளிர் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் மீண்டும் விளையாடவுள்ளதாகத் தெரிவித்துள்ளார். இந்திய அணியின் முன்னாள் வீராங்கனையும், முன்னாள் கேப்டனுமான மிதாலி ராஜ் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு…

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மிதாலி ராஜ் மகளிர் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் மீண்டும் விளையாடவுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் முன்னாள் வீராங்கனையும், முன்னாள் கேப்டனுமான மிதாலி ராஜ் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக கடந்த மாதம் அறிவித்தார். இதன் மூலம் தனது 23 ஆண்டுகால சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்தார். இந்திய மகளிர் அணிக்காக இதுவரை 12 டெஸ்டுகள், 232 ஒருநாள் போட்டிகள், 89 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். இறுதியாக இந்திய அணி பங்கேற்ற 50 ஓவர் உலகக் கோப்பைப் போட்டியில் மிதாலி விளையாடினார். 

இந்நிலையில், மகளிர் ஐபிஎல் போட்டியில் விளையாட ஓய்வில் இருந்து வெளியேறுவதாக அவர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, அவர் அளித்த பேட்டியில், மகளிர் ஐபிஎஸ் போட்டி அடுத்த ஆண்டு தொடங்கப்படும் என்று கூறப்படுகிறது. எதைப் பற்றியும் நான் இன்னும் முடிவு செய்யவில்லை. பெண்கள் ஐபிஎல் நடக்க இன்னும் சில மாதங்கள் உள்ளன. முதல் மகளிர் ஐபிஎல் போட்டியில் பங்கேற்க விரும்புகிறேன். 

ஓய்வுக்குப் பின்னர் என்னுடைய வாழ்க்கை மெதுவாக நகரும் என்று நினைத்தேன். இந்த நாள், அடுத்த வாரம், அடுத்த தொடர் பற்றி திட்டமிட வேண்டியதில்லை அல்லவா. ஓய்வு அறிவித்த பின்னர் கொரோனாவால் பாதிக்கப்பட்டேன். தொற்றில் இருந்து மீண்ட பிறகு பட விளம்பங்களில் பங்கேற்று வந்தேன். இப்போதும் வாழ்க்கை மிகவும் பரபரப்பாகப் போய்க் கொண்டிருக்கிறது. இதெல்லாம் முடிந்த பின்னர்தான் ஓய்வுக்குப் பிறகான வாழ்க்கையை குறித்து உணர்வேன் என்று நினைக்கிறேன் என்றார்.

-ம.பவித்ரா

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.