காமன்வெல்த் போட்டி; நீரஜ் சோப்ரா விலகல்?

காமன்வெல்த் போட்டியில் பங்கேற்கவிருந்த நீரஜ் சோப்ரா காயம் காரணமாக போட்டியிலிருந்து விலகுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.  இங்கிலாந்தின் பர்மிங்காமில் நடைபெற உள்ள காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி 2022 இல் இந்திய அணியினர் அதிக எண்ணிக்கையில் பங்கேற்பார்கள்…

காமன்வெல்த் போட்டியில் பங்கேற்கவிருந்த நீரஜ் சோப்ரா காயம் காரணமாக போட்டியிலிருந்து விலகுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

இங்கிலாந்தின் பர்மிங்காமில் நடைபெற உள்ள காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி 2022 இல் இந்திய அணியினர் அதிக எண்ணிக்கையில் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் 2022 ஜூலை 28ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 8 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

72 நாடுகளை சேர்ந்த 5,054 வீரர்களும், வீராங்கனைகளும் இந்த விளையாட்டு தொடரில் பங்கேற்பார்கள் என தெரிகிறது. 20 விளையாட்டுகளில் சுமார் 283 பிரிவுகளில் நடைபெற உள்ளது. இந்த காமன் வெல்த் போட்டியில் பங்கேற்பதற்காக இந்தியா சார்பில் 19 பிரிவுகளில் 200க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் சென்றுள்ளனர்.

டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கம் மற்றும் உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளி பதக்கங்கள் வென்ற இந்தியாவின் நீரஜ் சோப்ரா காயம் காரணமாக காமன்வெல்த் போட்டிகளில் இருந்து விலகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.