முக்கியச் செய்திகள் தமிழகம்

‘பெட்ரோல், டீசல், கேஸ் விலையை ஏற்றியதற்கு ஏன் போராட்டம் நடத்தவில்லை’ – அமைச்சர் கேள்வி

மின் கட்டணம் உயர்விற்காகப் போராட்டம் நடத்தும் அதிமுக பெட்ரோல், டீசல், கேஸ் விலையை ஏற்றியதற்கு ஏன் போராட்டம் நடத்தவில்லை என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

கரூரில் 44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அமைச்சர் செந்தில் பாலாஜி, பேரணியைத் தொடங்கி வைத்தார். இந்த விழிப்புணர்வு பேரணியில், 300-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் ஸ்கேட்டிங் வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பில் வீடுகளுக்கு பொருத்தப்படும் ஸ்மார்ட் மீட்டாருக்கு மாதாந்திர கட்டணம் வசூலிக்கப்படும் எனத் தவறான கருத்து பகிரப்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

மேலும், வீடுகள், குடிசைகளில் வசிக்கும் மின் நுகர்வோருக்கு எந்தவித ஸ்மார்ட் மீட்டர் கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது என்றும் தமிழ்நாட்டில் உள்ள 2 கோடியே 35 லட்சம் மின் இணைப்புகளில் 1 கோடி இணைப்புகளுக்கு எந்த கட்டண உயர்வும் இல்லை எனவும் 101 முதல் 200 யூனிட் வரை பயன்படுத்தப்படும் 63 லட்சத்து 35 ஆயிரம் பயனீட்டாளர்களுக்கு மாதம் 27 ரூபாயும், 2 மாதத்திற்கு 55 ரூபாய் மட்டுமே கூடுதலாகக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்று கூறினார்.

அண்மைச் செய்தி: ‘‘தர்மயுத்தம் நடத்திய ஓ.பன்னீர்செல்வம் தற்போது துரோக யுத்தம் நடத்தி வருகிறார்’ – சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ஆர்.பி.உதயகுமார்’

சமூக ஊடகங்களில் அரசியல் கட்சித் தலைவர்கள் சொல்வது ஏற்புடையது அல்ல என்றும் எந்த காரணத்தைக் கொண்டும் ஸ்மார்ட் மீட்டாருக்கு மாத கட்டணம் வசூலிக்கப்படமாட்டாது என்றும் தெரிவித்த அவர், கடந்த அதிமுக ஆட்சியில் 1.54 லட்சம் கோடி கடன் தொகையை உயர்த்தியது யார்? அந்த கடன் தொகைக்கு மாதம் 16 லட்சம் கோடி வட்டி கட்டியது யார்? 3ல் ஒரு பங்கு மின் உற்பத்தி செய்யப்பட்டு 3ல் 2 பங்கு மின்சாரத்தை வெளிச் சந்தையில் அதிக விலைக்கு வாங்கி மின் மிகை மாநிலம் எனச் சொல்லிக் கொண்டது யார் எனக் கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து பேசிய அவர், விவசாயிகளுக்கு மின் இணைப்பு கேட்டு 4.15 லட்சம் பேர் விண்ணப்பித்துக் காத்திருந்த போது அவர்களுக்கு மின் இணைப்பு ஏன் வழங்கப்படவில்லை எனக் கேள்வி எழுப்பிய அவர், தமிழ்நாடு மின்சார வாரியத்தை மூடக் கூடிய நிலைக்கு முன்னாள் அதிமுக அரசு வைத்திருந்ததாகக் குற்றச்சாட்டு தெரிவித்த அவர், தற்போது மின் கட்டணம் உயர்விற்காகப் போராட்டம் நடத்தும் அதிமுக பெட்ரோல், டீசல், கேஸ் விலையை ஏற்றியதற்கு ஏன் போராட்டம் நடத்தவில்லை எனக் கேள்வி எழுப்பினார். மேலும், அடித்தட்டு மக்கள் பாதிக்கப்படாமல் மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர், ஸ்மார்ட் மீட்டர் பொருத்துவதற்காக எந்த தொகையும் நிர்ணயம் செய்யப்படவில்லை எனத் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

ஆர்.ஆர்.ஆர். படத்தின் 2ம் பாகம் எப்போது? ராஜமௌலி வெளியிட்ட புதிய தகவல்

Jayasheeba

’அறப்போராட்டம் வென்றது நம்பிக்கை அளிக்கிறது’- நடிகர் சூர்யா

Halley Karthik

1990 முதல் அரியர் வைத்துள்ளவர்களுக்கு இறுதி வாய்ப்பு!

Halley Karthik