பெண்கள் ஆசிய கால்பந்து போட்டி; களத்தில் 5 தமிழக வீராங்கனைகள்

பெண்கள் ஆசிய கால்பந்து போட்டியில் இன்றைய ஆட்டத்தில் ஈரானை இந்திய அணி எதிர்கொள்கிறது.  மகளிருக்கான ஆசிய கால்பந்து கோப்பை தொடர் இன்று மும்பையில் தொடங்குகிறது. 1979ம் ஆண்டுக்கு பிறகு இந்த போட்டியை நடத்தும் வாய்ப்பை…

பெண்கள் ஆசிய கால்பந்து போட்டியில் இன்றைய ஆட்டத்தில் ஈரானை இந்திய அணி எதிர்கொள்கிறது. 

மகளிருக்கான ஆசிய கால்பந்து கோப்பை தொடர் இன்று மும்பையில் தொடங்குகிறது. 1979ம் ஆண்டுக்கு பிறகு இந்த போட்டியை நடத்தும் வாய்ப்பை இந்தியா பெற்றுள்ளது. இந்த போட்டியில் இதுவரை இந்தியா ஒருமுறை கூட கோப்பையை வென்றதில்லை. 1979 மற்றும் 1983ம் ஆண்டுகளில் இந்தியா 2வது இடத்தை பெற்றதே அதன் அதிகபட்சமாகும்.

இது 2023ம் ஆண்டு ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் நடைபெறும் பெண்கள் கால்பந்து போட்டிக்கு தகுதி சுற்றாக அமைந்ததால் இது முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுறது. இதில் இந்தியா தனது முதல் போட்டியில் ஈரானை எதிர்கொள்கிறது. இந்திய அணியில் சந்தியா, மாரியம்மாள், சௌமியா, இந்துமதி, கார்த்திகா உள்ளிட்ட 5 தமிழ்நாடு வீராங்கனைகள் இடம்பெற்றுள்ளனர். கடந்த 18 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆட்டத்தில்தான் தமிழ்நாடு வீராங்கனைகள் இடம்பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.