மகளிர் ஆசிய கோப்பை; இந்திய அணி 59 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி

மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் வங்காளதேச அணியை இந்திய அணி 59 ரன்கள் வித்தியாசத்தில்  வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. 8-வது மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி வங்காளதேசத்தின் சில்ஹெட் நகரில்…

மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் வங்காளதேச அணியை இந்திய அணி 59 ரன்கள் வித்தியாசத்தில்  வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

8-வது மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி வங்காளதேசத்தின் சில்ஹெட் நகரில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 7 அணிகளும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் டாப்-4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்குள் நுழையும். பாகிஸ்தானுடன் நேற்றைய போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்தது.

இந்நிலையில் வங்காள தேசத்திற்கு எதிராக இன்று இந்திய அணி விளையாடி வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்து 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் எடுத்துள்ளது. இந்திய அணியில் அதிகபட்சமாக ஷபாலி வர்மா 55 ரன்களும், ஸ்மிர்தி மந்தனா 47 ரன்களும் எடுத்தனர்.

இதையடுத்து 160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்காளதேச அணி பேட்டிங் செய்தது. இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறிய வங்காளதேச வீராங்கணைகள் அடுத்தடுத்து தங்களது விக்கெட்டுகளை இழந்தனர். அந்த அணியில் அதிகபட்சமாக சுல்தானால் 36 ரன்கள் எடுத்தார். இறுதியில் வங்காளதேச மகளிர் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 100 ரன்களே எடுத்தது. இதன் மூலம் 59 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.