சென்னை உயர்நீதிமன்றத்தில் பெண் நீதிபதிகள் எத்தனை பேர் தெரியுமா?

சென்னை உயர்நீதிமன்றத்தில் பெண் நீதிபதிகள் 13 பேர் பதவி வகித்து வருகின்றனர். பல உயர்நீதிமன்றங்களில் நீதிபதிகளை நியமிக்க உச்சநீதிமன்ற கொலீஜியம் சமீபத்தில் பரிந்துரைகளை வழங்கியது. இந்தியாவில் நீதிபதி பதவியிடங்களில் இருக்கும் பாலின விகிதம் குறித்தும்…

சென்னை உயர்நீதிமன்றத்தில் பெண் நீதிபதிகள் 13 பேர் பதவி வகித்து வருகின்றனர். பல உயர்நீதிமன்றங்களில் நீதிபதிகளை நியமிக்க உச்சநீதிமன்ற கொலீஜியம் சமீபத்தில் பரிந்துரைகளை வழங்கியது.

இந்தியாவில் நீதிபதி பதவியிடங்களில் இருக்கும் பாலின விகிதம் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது. சில ஆண்டுகளுக்கு முன்பு இந்திய நீதித் துறையில் நிலவும் பெண் நீதிபதிகளின் பற்றாக்குறை குறித்து இந்திய நீதித் துறை அறிக்கை வெளியிட்டது.
இந்த ஆய்வில் சென்னை உயர்நீதிமன்றத்தில் 13 பெண் நீதிபதிகளும், டெல்லி உயர்நீதிமன்றத்தில் 12 பெண் நீதிபதிகளும் உள்ளனர்.

மூன்றாவது இடத்தில் தெலங்கானா உயர்நீதிமன்றத்தில் 10 பெண் நீதிபதிகள் உள்ளனர். கேரளா மற்றும் பஞ்சாப் & ஹரியானா மாநில உயர்நீதிமன்றங்களில் தலா 7 பெண் நீதிபதிகள் பதவி வகித்து வருகின்றனர். நாட்டில் உள்ள 25 உயர் நீதிமன்றங்களில் 5-இல் ஒரு பெண் நீதிபதி கூட இல்லை. இந்திய நீதித் துறையில் பெண் நீதிபதிகளுக்கும் சம வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும்.

தற்போதைய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா, பெண்களுக்கும் 50 சதவீத இடஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும் என்று கூறியிருந்தார். இது பெண்களுக்கான உரிமை என்று அவர் தெரிவித்திருந்தார். உச்சநீதிமன்றத்தில் பெண் நீதிபதிகள் 2 பேர் நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து, பெண் நீதிபதிகளின் எண்ணிக்கை 4-ஆக அதிகரித்துள்ளது என்று அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச பெண் நீதிபதிகள் தினத்தையும் முதன்முறையாக உச்சநீதிமன்றம் மார்ச் 8-ஆம் தேதி கொண்டாடியது நினைவுகூரத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.