கோவை சிறுமி விவகாரம்: குற்றவாளிகள் மீது பாய்ந்த குண்டர் சட்டம்…!

கோவை சிறுமி படுகொலை வழக்கில் குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.

கோவை மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கடந்த 21-ம் தேதி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் தமிழ் நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுதொடர்பாக போலீசார் நடத்திய சோதனையில் சிறுமியின் பக்கத்து வீட்டை சேர்ந்த கார்த்திக், நண்பர் மோகன்ராஜ் ஆகியோரை கைது செய்யப்பட்டனர். இருவர் மீதும் போக்சோ மற்றும் கடத்தல் பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டுள்ளது.

போலீஸாரிடம் இருந்து தப்ப முயன்ற கார்த்திக் மாடியில் இருந்து கீழே குதித்ததில் அவரது கால், கை முறிந்தது. அவர் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மோகன்ராஜ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக குற்றப்பத்திரிகை தயாரிக்கும் பணியை போலீஸார் தீவிரப் படுத்தியுள்ளனர்.

இந்த நிலையில் மோகன்ராஜ் மற்றும் கார்த்திக் ஆகியோர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. மேற்கு மண்டல காவல்துறை தலைவர் ஐ ஜி ரம்யா பாரதி பரிந்துரையின் பெயரில் மாவட்ட ஆட்சியர் பவன் குமார் உத்தரவு பிறப்பித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.