முதல் டி20 போட்டி: இங்கிலாந்தை வீழ்த்தி ஆஸ்திரேலியா அணி வெற்றி!

ஆஸ்திரேலிய அணி 19.5 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 191 ரன்கள் எடுத்து போராடி வென்றது.

ஆஸ்திரேலியா – இங்கிலாந்து அணிகள் இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டம் இன்று மெல்போர்னில் உள்ள புகழ்பெற்ற மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் (MCG) நடைபெறுகிறது. இப்போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. அதன்படி இங்கிலாந்து அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் பிலிப்ஸ் சால்ட் முதல் பந்தில் டக் அவுட்டானார். அடுத்து இறங்கிய அனுரின் டொனால்டு 10 ரன்னில் வெளியேறினார். இதனால் 13 ரன்னுக்குள் 2 விக்கெட்டுகளை இழந்து இங்கிலாந்து திணறியது..

ஹாரி புரூக்-டாம் பாண்டன் ஜோடி இணைந்தது. ஹாரி புரூக் ருத்ர தாண்டவமாடி சிக்சர், பவுண்டரிகளாக விளாசி அரைசதம் கடந்தார். 3வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 97 ரன்கள் எடுத்த நிலையில் ஹாரி புரூக் 65 ரன்னில் ஆட்டமிழந்தார். டாம் பாண்டன் 22 பந்தில் 39 ரன் குவித்தார். இறுதியில் இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 187 ரன்கள் குவித்தது. ஆஸ்திரேலியா சார்பில் ஜேக் எட்வர்ட்ஸ், நிகில் சவுத்ரி தலா 2 விக்கெட் வீழ்த்தினர். இதையடுத்து, 188 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா களமிறங்கியது.

மிட்செல் மார்ஷ் அதிரடியாக ஆடி 32 பந்தில் 37 ரன் எடுத்து அவுட்டானார். அடுத்து இறங்கிய சாம் ஹார்பர் 15 பந்தில் 32 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். கடைசி கட்டத்தில் ஜேக் எட்வர்ட்ஸ் அதிரடியாக ஆடி 11 பந்தில் 2 சிக்சர், ஒரு பவுண்டரி உள்பட 25 ரன் குவித்து வெற்றிக்கு வழி வழி வகுத்தார். இறுதியில், ஆஸ்திரேலிய அணி 19.5 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 191 ரன்கள் எடுத்து போராடி வென்றது. அத்துடன் டி20 தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.