தலிபானின் துப்பாக்கியை துணிவுடன் எதிர்க்கும் ஆப்கான் பெண்: வைரலாகும் புகைப்படம்

தன்னை நோக்கி தலிபான்  குறிபார்த்தாலும் அதை எதிர்த்து துணிவுடன் நிற்கும் ஆப்கானிஸ் தான் பெண்ணின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேற தொடங்கியதை அடுத்து கடந்த மாதம்…

தன்னை நோக்கி தலிபான்  குறிபார்த்தாலும் அதை எதிர்த்து துணிவுடன் நிற்கும் ஆப்கானிஸ் தான் பெண்ணின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேற தொடங்கியதை அடுத்து கடந்த மாதம் 15 ஆம் தேதி, தலிபான்கள் ஆப்கானை வசப்படுத்தினர். இதையடுத்து அமெரிக் கா, இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் அந்நாட்டில் சிக்கியிருக்கும் தங்கள் நாட்டு குடிமக் களை விமானங்கள் மூலமாக வெளியேற்றின.

தலிபான்களுக்குப் பயந்து ஆயிரக்கணக்கான ஆப்கானிஸ்தானியர்களும் அண்டை நாடு களுக்கு தப்பிச் சென்றனர். இன்னும் செல்வதற்கு முயற்சித்து வருகின்றனர். அந்த நாட்டின் அரசியல் கட்சி தலைவர்கள், எம்.பிக்கள் பலர் வெளிநாடுகளில் அடைக்கலம் தேடியுள்ளனர். இதற்கிடையே தலிபான்கள் ஆட்சி அமைப்பதற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் தலிபான்களுக்கு ஆதரவளிக்கும் பாகிஸ்தானுக்கு எதிராக ஆப்கானிஸ் தானில் கடந்த மூன்று நாட்களாக, மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் போராட்டத்தின் போது, சில இடங்களில், தலிபான்கள் துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் ஈடு பட்டுள்ளனர்.

https://twitter.com/ZahraSRahimi/status/1435237441842159622

இந்நிலையில் பாகிஸ்தான் தூதரகத்துக்கு எதிராக நேற்றும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தலிபான்கள், துப்பாக்கியை காட்டி அவர்களை மிரட்டினர். அப்போது பெண் ஒருவரை நோக்கி தலிபான் படையை சேர்ந்தவர் துப்பாக்கியால் குறிபார்க்கிறார். அந்த துப்பாக்கிக் குண்டை எதிர்கொள்ள தயாராக இருப்பது அந்தப் பெண் எதிர்த்து நிற்கிறார். அரு கில் ஏராளமானோர் பாகிஸ்தானுக்கு எதிராக கோஷங்களை எழுப்பிய வண்ணம் உள்ளனர்.

இந்தப் புகைப்படத்தை ராய்டர் புகைப்படக்கலைஞர் எடுத்துள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.