முக்கியச் செய்திகள் சினிமா

ஷங்கர் -ராம் சரண் இணையும் படம்: கிளாப் அடித்து தொடங்கி வைத்த சிரஞ்சீவி

ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் தேஜா நடிக்கும் படத்தின் பூஜை ஐதராபாத்தில் இன்று
தொடங்கியது.

கமல்ஹாசன், காஜல் அகர்வால், ரகுல் பிரீத் உட்பட பலர் நடிக்கும் ’இந்தியன் 2’ படத்தை
இயக்கி வந்தார், இயக்குநர் ஷங்கர். பட்ஜெட் அதிகமானதால், லைகா நிறுவனத்துடன் ஏற்பட்ட பிரச்னை காரணமாக ஷூட்டிங் தாமதமானது.

இந்நிலையில் இயக்குநர் ஷங்கர், பிரபல தெலுங்கு ஹீரோ ராம் சரண் நடிக்கும் படத்தை இயக்க ஒப்பந்தமானார். தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ தனது வெங்கடேஷ்வரா கிரியேஷன்ஸ் மூலம் தயாரிக்கும் இந்தப் படத்தின் அறிவிப்பு, சில மாதங்களுக்கு முன் வெளியானது.

இந்நிலையில் ’இந்தியன் 2’ படத்தை முடிக்காமல், வேறு படத்தை இயக்க ஷங்கருக்குத்
தடை விதிக்க வேண்டும் என்று லைகா நிறுவனம் வழக்குத் தொடர்ந்தது. இப்போது இரண்டு
தரப்பும் சமரசமாக செல்ல முடிவு செய்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

இந்தப் படத்தில் ராம் சரண் ஜோடியாக, பாலிவுட் நடிகை கியாரா அத்வானி ஒப்பந்தம்
செய்யப்பட்டார். கியாராவின் பிறந்த நாளன்று படக்குழு இதை உறுதிப்படுத்தியது.
படத்துக்கு தமன் இசை அமைக்கிறார். திரு ஒளிப்பதிவு செய்கிறார். நடிகர் ஜெயராம், அஞ்சலி முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

இந்தப் படத்தின் தொடக்கவிழா ஐதராபாத்தில் உள்ள ஸ்டூடியோ ஒன்றில் இன்று நடந்தது.
இதில், பாலிவுட் ஹீரோ ரன்வீர் சிங், இயக்குநர்கள் எஸ்.எஸ்.ராஜமவுலி, லிங்குசாமி, எழுத்தாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சு.வெங்கடேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர். தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி, கிளாப் அடித்து படப்பிடிப்பைத் தொடங்கி வைத்தார். இந்தப் படத்தின் வழக்கமான படப்பிடிப்பு அடுத்த மாதம் முதல் தொடங்குகிறது.

முன்னதாக இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது. அந்த போஸ்டரில் ராம் சரண், கியாரா அத்வானியுடன் இயக்குநர் ஷங்கர், தயாரிப்பாளர் தில் ராஜு, இசை அமைப்பாளர் தமன், ஒளிப்பதிவாளர் திரு ஆகியோர் கோட் சூட் அணிந்து இடம்பெற்றுள் ளனர். இந்தப் படத்தில் ஹீரோ ராம் சரணும் ஹீரோயின் கியாராவும் அரசு அதிகாரிகளாக நடிப்பதாகக் கூறப்படுகிறது.

Advertisement:
SHARE

Related posts

வேலூர்: ஊரக உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணி இடப்பங்கீடு

Halley Karthik

கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கான நிதியுதவி திட்டம்

Gayathri Venkatesan

கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் இல்லா மாவட்டங்கள் அறிவிப்பு

Gayathri Venkatesan