வாரவாரம் புதிது புதிதாகக் கேளிக்கைக்குப் பஞ்சமில்லாமல் தியேட்டர் மற்றும் OTT-ல் பல திரைப்படங்களும் வெப் தொடர்களும் வெளியாகி வருகிறது. அந்த வரிசையில் இந்த வாரமும் பல சுவாரசியமான திரைப்படங்கள் வெப் தொடர்கள் வெளியாகி உள்ளது.
வாரவாரம் தமிழ் சினிமாவில் ஏதாவது ஒன்று இரண்டு படக்கள் வெலியாவது வழக்கமே. அதிலும் குறிப்பாக பண்டிகை நாட்கள் என்றால் சொல்லவே தேவையில்லை. போட்டி போட்டுக் கொண்டு படக்கள் தியேட்டர்களில் வெளியாகும். இந்நிலையில் இந்த பொங்களுக்கு தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களாக வலம் வரும் விஜய்- அஜித் படங்கள் தனிதனியாக வந்தாலே திரையரங்குகள் திருவிழாக்கோலம் காணும். இருவரது படங்களும் ஒரே நேரத்தில் வருகிறது என்றால் அந்த எதிர்பார்ப்பு குறித்து சொல்லவே தேவையில்லை.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அத்துடன், OTT இயங்குதளங்கள், மாறுபட்ட மற்றும் பல வகையான திரைப்படங்கள் மற்றும் தொடர்களைப் பார்ப்பதற்கு மிகவும் விருப்பமான ஒரு கேளிக்கை தளங்களாக மாறியுள்ளது. ஏனெனில் இந்த தளங்களில் மக்கள் தங்கள் இருப்பிடத்திலேயே அவர்களுக்குப் பிடித்த நிகழ்ச்சிகளையும் திரைப்படங்களையும் பார்க்க அனுமதிக்கிறது. அந்த வகையில் இந்த வாரம் இந்த வாரம் அமேசான் பிரைம், நெட்ஃபிளிக்ஸ், சோனி லிவ், ஜீ5 உள்ளிட்ட ஓடிடி தளங்களில் வெளியாக உள்ள படங்களின் முழுப்பட்டியல் இதோ.
தியேட்டர் ரிலீஸ்:
துணிவு
அஜித், மஞ்சு வாரியர் நடிப்பில் இன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ளது துணிவு படம். போனி கபூரின் குறைவான பட்ஜட்டில் எந்த அளவிற்குப் படத்தை முழுமையாக மாற்ற முடியுமோ அந்த அளவிற்கு இயக்கி உள்ளார் வினோத்.
ட்ரெய்லரை பார்த்துவிட்டு அஜித் தான் வங்கியில் கொள்ளையடிப்பார் என்று எண்ணி இருப்போம். ஆனால் படம் ஆரம்பிக்கும் போதே ட்விஸ்ட். போக போக தான் தெரியும் அஜித் எதற்காக அந்த வங்கிக்குள் நுழைவார் என்று.
படத்தின் முதல் பாதியில் என்ன கதையென்றே தெரியாது ஆனால் படத்தில் அடுத்து என்ன நடக்க போகிறதோ என்ற ஆர்வம் நம்மை இழுத்துச் செல்லும். 2ம் பாதியில் தான் கதையின் களம் காண்கிறது துணிவு.
மொத்தத்தில் அடர்த்தியான கருத்தை, ஆக்ஷன் காட்சிகள் மற்றும் மாஸ் ஹீரோ ஒருவரின் வழியாக சொல்ல முனைந்திருக்கிறது படம். நொடிக்கு நொடி எனர்ஜியை கொடுக்கும் இப்படம் ரசிகர்களின் மனதில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
வாரிசு
தெலுங்கு சினிமாவின் முன்னணி இயக்குனர் வம்சி உடன் கூட்டணி அமைத்து விஜய் வாரிசு திரைப்படத்தில் நடித்தார். தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் வாரிசு படம் எடுக்கப்பட்டது. இந்த படத்தில் விஜய்யுடன் மிகப்பெரிய நடிகர் பட்டாளமே நடித்துள்ளனர். ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், பிரகாஷ் ராஜ், யோகி பாபு, ஜெயசுதா, ஸ்ரீகாந்த், ஷாம், பிரபு, சங்கீதா, கணேஷ் வெங்கட்ராமன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். எஸ்.ஜே.சூர்யா சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.
குடும்ப உறவையும், அதன் பின்னால் இருக்கும் சிக்கலையும் மையமாக கொண்டு இந்த படம் உருவாகியுள்ளது. படத்தின் தொடக்கம் முதல் இறுதி காட்சி வரை தனி ஒருவராக ஒட்டு மொத்த படத்தை விஜய் தன்னுடைய முதுகில் சுமந்து செல்கிறார். 90களில் பார்த்த துரு துருப்பான, இளமையான விஜய்யை இந்த படத்திலும் பார்க்க முடிகிறது. குறிப்பாக யோகி பாபு உடன் செய்யும் நகைச்சுவை காட்சிகளும் ராஷ்மிகா விஜய் இடையேயான காதல் காட்சிகள் ரசிக்கவும் சிரிக்கவும் வைக்கிறது. வசனங்களிலும், காட்சிகளிலும், ரசிகர்களை தன் பக்கம் கவர்ந்திழுக்கும் ஒரு காந்தமாக விஜய் இப்படத்தில் தெரிகிறார். குறிப்பாக பாடலுக்கு விஜய் ஆடும் நடனம் ரசிகர்களையும் நடமாட வைக்கிறது.
ஆக்சன் காட்சிகள் திரையரங்கையே அதிர வைக்கிறது. ஆல் ரவுண்டராக தனது கொடுக்கப்பட்ட அனைத்தையும் விஜய் சிறப்பாக செய்து முடித்துள்ளார். ஒரு சில குறைகள் இருந்தாலும் குடும்பத்துடன் சென்று திரையரங்கில் பார்த்து ரசிக்கும் வகையில் வாரிசு திரைப்படம் உருவாகி இருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும்.
வீர சிம்ஹா ரெட்டி (தெலுங்கு)
தெலுங்கு சினிமாவின் மாஸ் நடிகரான பாலகிருஷ்ணா கதாநாயகனாக நடித்துள்ள 107வது படம் ‘வீர சிம்ஹா ரெட்டி’ திரைப்படத்தை கோபிசந்த் மல்லினேனி இயக்கியுள்ளார். பாலகிருஷ்ணா இரட்டை வேடங்களில் நடித்துள்ள இந்த படம் தெலுங்கில் விஜய்யின் வாரிசுடுக்கு போட்டியாக வெளியாகியுள்ளது.
இந்த படத்தில் பாலகிருஷ்ணாவுக்கு ஜோடியாக நடிகை ஸ்ருதிஹாசன் நடித்துள்ளார். மேலும், நடிகை வரலட்சுமி சரத்குமார், ஹனிரோஸ், துனியா விஜய் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். எப்போதும் போல் பாலகிருஷ்ணாவின் படங்களில் இருக்கும் அத்தனை அம்சங்களும் இந்த படத்திலும் அப்படியே உள்ளது.
கல்யாணம் கமணீயம் (தெலுங்கு)
கல்யாணம் கமணீயம் திரைப்படம் சந்தோஷ் ஷோபன், பிரியா பவானி சங்கர், தேவி பிரசாத், பவித்ரா உள்ளிட்டோர் நடிப்பில், அனில் குமார் ஆலா இயக்கத்தில் உருவாகியுள்ளது.
காதலை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ள இத்திரைப்படம் நாளை ஜனவரி 14ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
வால்டர் வீரைய்யா (தெலுங்கு)
சிரஞ்சீவி, ஸ்ருதிஹாசன், பிரகாஷ் ராஜ், நாசர், கேத்தரின் தெரசா என நட்சத்திர பட்டாளமே வால்டர் வீரைய்யா படத்தில் இணைந்து நடித்துள்ளனர். கே.எஸ்.ரவீந்திரா இயக்கியுள்ள இப்படத்தில் சிரஞ்சீவியுடன் இணைந்து ரவி தேஜா நடித்துள்ளார்.
மைத்ரி மூவி மேக்கர்ஸ் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் நவீன் யெர்னேனி மற்றும் ஒய்.ரவி சங்கர் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர்.முழுக்க முழுக்க ஆக்ஷன், பஞ்ச் வசனங்களாக நீளும் இந்த படம் இன்று (ஜனவரி 13-ம் தேதி) திரையரங்குகளில் வெளியாகிறது.
பிளேன் (ஆங்கிலம்)
பிளேன் திரைப்படம் ஜெரார்ட் பட்லர், மைக் கோல்டர், லில்லி க்ரூக் உள்ளிட்டோர் நடிப்பில், ஜீன்-பிராணகாய்ஸ் ரீசெட் இயக்கத்தில் உருவாகியுள்ள ஒரு ஆங்கிலத் திரைப்படம். இத்திரைப்படம் இன்று (ஜனவரி 13ம் தேதி) திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது.
ஓடிடி ரிலீஸ்கள்:
லத்தி
விஷால், சுனைனா நடிப்பில் வினோத் குமார் இயக்கத்தில் கடந்த மாதம் திரையரங்குகளில் வெளியான ‘லத்தி’ திரைப்படம் தற்போது சன் என்ஸ்டி ஓடிடி தளத்தில் வரும் 14 -ம் தேதி வெளியாக உள்ளது.
லம்போரஃஹினி: தி மேன் பெஹிந்தி தி லெஜெண்ட்
லம்போரஃஹினி: தி மேன் பெஹிந்தி தி லெஜெண்ட் திரைப்படம் ஃபிராங்க் கிரில்லோ, மீரா சர்வினோ, கேப்ரியல் பைர்ன் உள்ளிட்டோர் நடிப்பில் ராபர்ட் மோரெஸ்கோ இயக்கத்தில் உருவாகியுள்ள ஆங்கில மொழித் திரைப்படம்மாகும். இத்திரைப்படம் அமேசான் ப்ரிமே வீடியோ ஓடிடி தளத்தில் நாளை (13ம் தேதி) வெளியாக உள்ளது.
டாக் கான் (ஆங்கிலம்)
டாக் கான் திரைப்படம் ராப் லோவ், கிம்பர்லி வில்லியம்ஸ், ஜானி பெர்ச்டோல்ட் உள்ளிட்டோர் நடிப்பில் ஸ்டீபன் ஹெரேக் இயக்கத்தில் உருவாகியுள்ள ஆங்கில திரைப்படம் ஆகும். இப்படம் நெட்டபிலிஸ் ஓடிடி தளத்தில் ஜனவரி 11ம் தேதி வெளியாகியுள்ளது.