கேரளாவில் பெண் மருத்துவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் போது, மருத்துவமனையில் பதிவான சிசிடிவி காட்சிகளை காவல்துறையினர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர்.
கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் கொட்டாரக்கரா அரசு மருத்துவமனையில் போலீஸாரால் அழைத்துவரப்பட்ட கைதி சந்தீப், கத்திரிக்கோலினால் நடத்திய தாக்குதலில் படுகாயமுற்று மருத்துவர் வந்தனா தாஸ் உயிரிழந்தார். இந்த சம்பவம், மாநிலம் முழுவதும் கடும்அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக கேரள உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கில், காவல்துறையினர் அறிக்கை தாக்கல் செய்தனர். படுகொலை சம்பவத்தின் போது ((மருத்துவர் வந்தனா தாஸ் அதிகாலை 4 மணி 17 நிமிடம் முதல் 4 மணி 38 நிமிடத்திற்கு இடைப்பட்ட 20 நிமிடங்களில் கொலை நடந்துள்ளதாகவும், அப்போது)) மருத்துவமனையில் பதிவான சிசிடிவி காட்சிகளையும் போலீசார் சமர்பித்துள்ளனர்.
இதனிடையே இடுக்கி மாவட்டம் நெடுங்கண்டம் மருத்துவமனையில் குடிபோதையில் வீண் தகராறில் ஈடுபட்டு வந்த பிரவீன் என்பவரை போலீசார் கைது செய்து, மருத்துவ பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அப்போது அவர், மருத்துவர்களுடன் தகராறில் ஈடுபட்டதால், அச்சமுற்ற மருத்துவர்கள் பாதுகாப்பு கருதி, பிரவீனின் கை, கால்களை கட்டிப் போட்டு சிகிச்சை அளித்தனர்.
- பி.ஜேம்ஸ் லிசா








