சுட்டெரிக்கும் வெயிலில் மூச்சு வாங்க நடந்து சென்ற கர்ப்பிணிக்கு ஓடி சென்று
உதவிய பெண் காவல் உதவி ஆய்வாளருக்கு பாராட்டுகள் குவிந்தன.
திண்டுக்கல் மாவட்டம் பழனியை சேர்ந்தவர் சுவாதிகா. இவர் கடந்த 2021 ஆம் ஆண்டு
உதவி ஆய்வாளர் தேர்வில் தேர்ச்சி பெற்று தற்போது திருநெல்வேலி சந்திப்பு காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இவருக்கு திருநெல்வேலி ரயில் நிலைய பாதுகாப்பு பணி ஒதுக்கப்பட்டிருந்த நிலையில் நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் முதலாவது நடை மேடையில் சக பெண் காவலர்களுடன் பணியில் இருந்தார்.
அப்போது, எதிரே இரண்டாவது நடை மேடையில் கர்ப்பிணி பயணி ஒருவர் அதிகமான சுமைகளை தூங்கி கொண்டு கடும் வெயிலில் தன் இரண்டு வயது குழந்தையை நடத்தி அழைத்து வந்தார். கர்பிணி நடக்க முடியாமல் சிரமபடுவதை கவனித்த பெண் காவல் உதவி ஆய்வாளர் சுவாதிகா, தாய்மை உணர்வுடன் விரைந்து சென்று, நடக்க முடியாமல் வந்த பெண்ணிடம் இருந்து குழந்தையை தூக்கி வந்து ரயில் பாதையை கடக்க உதவி செய்தார். அவரின் உதவி செய்யும் இந்த மனப்பான்மையை அங்கிருந்த மக்கள் அனைவரும் வெகுவாக பாராட்டினர்.
—-ம. ஶ்ரீ மரகதம்







