வேலை தருவதாக அழைத்து, கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்ததாக இளம் பெண் கொடுத்துள்ள புகார் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் குண்டூரில் உள்ள எஸ்.ஆர்.நகரைச் சேர்ந்தவர், 28 வயது இளம் பெண்.
இவருக்கு அதே பகுதியை சேர்ந்த ராஜ்கிரண் என்பவர் பழக்கமானார். சில நாள் பழக்கத் துக்குப் பிறகு வேலை தருவதாக, அவருடையை அறைக்கு அழைத்துள்ளார். நம்பிச் சென்றார் அவர். அப்போது ’இதை குடிங்க’ என்று கூல் ட்ரிங்ஸ் கொடுத்துள்ளார். குடித்தார். அதில் மயக்க மருந்து கலந்திருந்தது அவருக்குத் தெரியவில்லை. குடித்ததும் மயங்கி விட்டார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
பிறகு ராஜ்கிரணும் அவர் நண்பர்கள் மூன்று பேரும் அவரை பாலியல் வன்கொடுமை செய்து அதை வீடியோ எடுத்துள்ளனர். இந்தச் சம்பவம் கடந்த மார்ச் மாதம் நடந்துள்ளது. இந்நிலை யில் அந்த வீடியோ, சமூக வலைதளங்களில் சமீபத்தில் பரவியது. இதையடுத்து பாதிக்கப் பட்ட இளம் பெண், போலீசில் புகார் கூறியதை அடுத்து அவர்கள் விசாரித்து வருகின்றனர்.
இதற்கிடையே ராஜ்கிரணுக்கும் அந்தப் பெண்ணும் பணப்பிரச்னை இருந்ததாகத் தெரிய வந்துள்ளதாக போலீசார் கூறியுள்ளனர்.