பொதுமக்கள் 100% தடுப்பூசி செலுத்திக்கொள்ள முன்வர வேண்டும் – ஆளுநர்

பொதுமக்கள் அனைவரும் 100% தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என ஆளுநர் வலியுறுத்தியுள்ளார். சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ளஆக்சிஜன் பிளாண்ட் மற்றும் 14 படுக்கைகள் கொண்ட தீவிர கொரோனா சிகிச்சை பிரிவை…

பொதுமக்கள் அனைவரும் 100% தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என ஆளுநர் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ளஆக்சிஜன் பிளாண்ட் மற்றும் 14 படுக்கைகள் கொண்ட தீவிர கொரோனா சிகிச்சை பிரிவை ஆளுநர் பன்வாரிலால் புரோகித் திறந்து வைத்தார்.

அதனைத் தொடர்ந்து பேசிய அவர், “கொரோனா காலத்தில் மிகப்பெரிய சவாலை நாடு எதிர்கொண்டது அனைவரும் பழைய நிலைக்கு திரும்ப போராடி வருகிறோம். கொரோனாவை எதிர்கொள்ளும் வகையில் மக்களை பாதுகாக்க சிறப்பான பணியை வழங்கிய மருத்துவர்கள், முன்கள ஆகியோருக்கு என்னுடைய பாராட்டுக்கள்.

நம் நாட்டை கொரோனா இரண்டாம் அலை மிகவும் கடுமையாக தாக்கி உள்ளது, இரண்டாம் அலையின் போது தமிழகத்தில் தனியார் மருத்துவமனைகளின் பங்களிப்பு மிகப்பெரிய அளவில் இருந்தது. பல வளர்ந்த நாடுகளை காட்டிலும் இந்தியா கொரோனாவை சிறப்பாக கையாண்டு உள்ளது.

நம் நாட்டில்தான் நோயில் இருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை அதிமாக உள்ளது, இறப்பும் குறைந்த அளவிலேயே உள்ளது. கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றியும், 100% தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும்.” என ஆளுநர் தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.