தமிழ் நாடு சட்டமன்ற தேர்தலில் சுமார் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக தவெக உருவெடுத்துள்ளது. இதனால் 1967 க்கு பிறகு அதிமுக மற்றும் திமுக அல்லாத ஒரு கட்சி தமிழ் நாட்டில் ஆட்சி அமைக்க உள்ளது.
மொத்தமுள்ள 234 தொகுதிகளில் பெரும்பான்மைக்கு 118 இடங்கள் தேவைப்படுகிறது. ஆனால் 108 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ள தவெக ஆட்சியமைக்க இன்னும் 10 இடங்கள் வேண்டும். இதனால் காங்கிரஸ், பாமக உள்ளிட்ட கட்சிகளிடம் தவெக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் இன்று சென்னை பனையூரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர்களுடன் தவெக தலைவர் விஜய் ஆலோசனை நடத்த உள்ளார்.
இதனை தொடர்ந்து காலை முதலே தேர்தலில் வெற்ற பெற்ற தவெக வேட்பாளர்கள் பனையூரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்திற்கு வந்த வண்ணம் உள்ளனர்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் எந்தக் கட்சிகளுடன் கூட்டணி வைக்கலாம் என விஜய் கருத்து கேட்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.







