சிறுமியை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்த அரசு ஊழியரிடம் நீங்கள் அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்வீர்களா என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார். இது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மாகாராஷ்டிரா மாநில மின்சார உற்பத்தி நிறுவனத்தில் பணிபுரிந்து வருபவர் மோஹித் சுபாஷ். பள்ளி மாணவியை பலமுறை பாலியல் வன்முறை செய்தாதாக இவர் மீது போக்சோ சட்டபிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் தன்னை கைது செய்யக்கூடாது என மோஹித் சுபாஷ் உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.இந்த வழக்கு தொடர்பான விசாரணை நேற்று உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது குற்றவாளியிடம் நீங்கள் அந்த பெண்ணை மணந்து கொள்வீர்களா? என நீதிபதி கேள்வி எழுப்பினார். அதற்கான முயற்சியை எடுப்போம் என குற்றவாளியின் வழக்கறிஞர் தெரிவித்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அதற்கு அடுத்து நீஙகள் அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்யும்போது உங்களுக்கு நீங்கள் ஒரு அரசு என்பது உங்களுக்கு தெரியாதா? நாங்கள் உங்களை அந்த பெண்ணை திருமணம் செய்ய கட்டாயப்படுத்தவில்லை, நீங்கள் விரும்பினால் எங்களுக்கு தெரியப்படுத்துங்கள். இல்லையெனில் நாங்கள் அவளை திருமணம் செய்துகொள்ளும்படி உங்களை கட்டாயப்படுத்துகிறோம் என கூறுவீர்கள். மேலும் நீங்கள் அவளை திருமணம் செய்து கொள்ள விரும்பினால் நாங்கள் உங்களுக்கு உதவ முடியும் இல்லை எனில் நீங்கள் உங்களது வேலையை இழந்து சிறைக்கு செல்ல நேரிடும்” என நீதிபதி கூறினார்.
அதற்கு பதிலளித்த மோஹித் தரப்பு, முன்னர் நான் அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்ளலாம் என இருந்தேன். ஆனால் அந்த பெண் அப்போது திருமணம் செய்து கொள்ள மறுத்துவிட்டாள். இப்போது எனக்கு திருமணம் ஆகிவிட்டது. அதனால், இப்போது என்னால் முடியாது என தெரிவித்தார். மேலும், வழக்கு இன்னும் நடந்து வருகிறது. என் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை. நான் ஒரு அரசு ஊழியர் என்பதால் கைது செய்யப்பட்டவுடன் எனதுவேலை பறிக்கபடும் என்பது எனக்கு தெரியும் என பதிலளித்தார். இவை அனைத்தையும் கேட்ட நீதிபதி, நான்கு வாரங்கள் அவரை கைது செய்யக்கூடாது என உத்தரவிட்டார். அதன்பின் நீங்கள் வழக்கான ஜாமீனுக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவித்தார்.
இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டவரின் பெண்ணின் உறவினராவார். அந்த பெண் பள்ளியில் படித்து கொண்டிந்த சமயத்தில் குற்றம்சாட்டப்பட்டவர் மாணவியை பலநாட்களாக பின்தொடர்ந்து அவரை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதையறிந்த மாணவின் தாயார் போலீஸ் நிலையம் செல்ல முற்பட்டபோது குற்றம்சாட்டப்பட்ட மோஹித்தின் தாய் பெண்ணிற்கு 18 வயது நிரம்பியதும் திருமணம் செய்து வைப்பதாக உறுதியளித்தார். ஆனால், பெண்ணிற்கு 18 வயது நிரம்பியதும் அவரை திருமணம் செய்து கொள்ள சொன்னபோது மோஹித் மறுத்தாக கூறப்படுகிறது. இதையடுத்து அந்த பெண்ணின் தாய் போலீஸில் புகாரளித்துள்ளார். அந்த வழக்கை ஏற்ற போலீஸார் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததற்காக போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இந்நிலையில்தான் குற்றம் சாட்டப்பட்ட மோஹித் தன்னை போக்சோ சட்டத்தில் கைது செய்ய்க்கூடாது என உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.