இருவீட்டாரின் சம்மதத்துடன் விரைவில் திருமணம் நடைபெறும் என நடிகர் முனீஸ் ராஜா வீடியோ வெளியிட்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர் என பன்முக திறமை கொண்டவர் ராஜ்கிரன். இந்நிலையில், நடிகர் ராஜ்கிரனின் மகள் ஜீனத் பிரியா, முனீஸ் ராஜை காதலித்து திருமணம் செய்துகொண்டதாக தகவல் வெளியானது. சின்னத்திரையில் ’நாதஸ்வரம்’ என்ற தொடரின் மூலம் காமெடி நடிகராக அறிமுகமானவர் முனீஸ் ராஜா. தமிழ் சினிமாவில் வில்லன் மற்றும் குணச்சித்திர நடிகரான சண்முகராஜனின் தம்பியான இவர், தொடர்ந்து பல சீரியல்களில் நடித்து வருகிறார்.

முனீஸ் ராஜா, ராஜ்கிரணின் மகள் ஜீனத் பிரியாவுடன் ஃபேஸ்புக்கில் அறிமுகமாகி நண்பர்களாக பழகி வந்துள்ளார். நாளடைவில் இது காதலாக மாறிய நிலையில், இருவரும் வெவ்வேறு மதத்தை சேர்ந்தவர்கள் என்பதால் திருமணத்திற்கு எதிர்ப்பு எழுந்துள்ளது. இதனிடையே முனீஸ் ராஜா, ஜீனத் பிரியா இருவரும் வீட்டை விட்டு வெளியேறி பதிவுத்திருமணம் செய்துகொண்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக முனீஸ்ராஜா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் எங்களது திருமணம் குறித்து பல்வேறு வதந்திகள் பரவி வருவதால் இந்த விலக்கத்தை அளிக்கிறேன். எங்களது திருமணத்திற்கு வாழ்த்து தெறிவித்த உங்கள் அனைவருக்கும் எங்களது நன்றி. இருவீட்டாரின் சம்மதத்துடன் விரைவில் திருமணம் நடைபெறும் எங்களுக்கு நீங்கள் தொடர்ந்து அதரவு அளிக்க வேண்டும் என பேசினார்.







