முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

“கட்சி வீணாவதை பார்த்துக்கொண்டு இருக்க முடியாது” – சசிகலா

மிகவும் கஷ்டப்பட்டு வளர்த்த கட்சி வீணாவதை பார்த்துக்கொண்டு இருக்க முடியாது என சகிகலா பேசியதாக ஆடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது!

சசிகலா சமீபத்தில் தனது தொண்டர் ஒருவருடன் பேசிய வீடியோ ஒன்று சமூக வளைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதில் மிகவும் கஷ்டப்பட்டு வளர்த்த கட்சி வீணாவதை பார்த்துக்கொண்டு இருக்க முடியாது என்று கூறியுள்ளார்.

மேலும், “தற்போது கொரோனா காலக்கட்டம் என்பதால் அனைவரும் கவனமாக இருக்க வேண்டும், நான் விரைவில் நல்ல முடிவை எடுக்கிறேன். நீங்கள் கவலைப்படாதீர்கள். அவர்கள் சண்டை போட்டுக்கொண்டுள்ளதை பார்த்தால் மிகவும் வருத்தமாக இருக்கிறது. நாங்கள் மிகவும் கஷ்டப்பட்டு வளர்த்த கட்சி வீணாவதை பார்த்துக்கொண்டு இருக்க முடியாது.” என்று தனது தொண்டருடன் சசிகலா பேசியுள்ளார்.

தொடர்ந்து, கொரோனா தாக்கம் குறைந்ததும் தான் அனைவரையும் சந்திப்பதாகவும், அதனையடுத்து கட்சியை சிறப்பாக கொண்டுவரலாம் என்றும் தனது உரையாடலில் அவர் தெரிவித்துள்ளாதாக ஆடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement:

Related posts

இந்தியாவுக்கு 10 மில்லியன் டாலர் நிதியுதவி; கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவிப்பு

Ezhilarasan

குஜராத்தில் சாலையோரம் உறங்கிக்கொண்டிருந்தவர்கள் மீது லாரி மோதி விபத்து: 15 பேர் பலி, 6 பேர் படுகாயம்!

Saravana

இந்திய வில்வித்தை ஜோடி மூன்று தங்கப்பதக்கங்கள் வென்று சாதனை

Karthick