முக்கியச் செய்திகள் தமிழகம்

ஆதரவற்றோருக்கு 3 வேளையும் இலவச உணவு – அமைச்சர் செந்தில் பாலாஜி

போன் செய்தால் வீடு தேடிவரும் இலவச உணவு. கரூரில் கலக்கும் தமிழக மின்சாரத்துறை அமைச்சர்.

தமிழகத்தில் கொரோனா தொற்று பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தி வருகின்ற நிலையில், முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் உணவின்றி தவிக்கும் ஏழை மக்களுக்கு தளபதி கிச்சன் என்கிற பெயரில் இலவசமாக உணவினை வழங்கி வருகிறார் தமிழக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி.

மேலும், உணவு தேவைப்படுவோர் தொலைப்பேசி வாயிலாக தங்களை தொடர்புகொள்ளலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இத்திட்டம் ஊரடங்கு அமலில் உள்ள நாள் வரை தொடரும் என்று தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் கொரோனா தொற்று பாதிப்பு கடந்த மூன்று நாட்களாக குறைந்து வரக்கூடிய நிலையில், தினசரி தொற்று பாதிப்பில் தமிழகம் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது. இதன் காரணமாக தொற்று தடுப்பு நடவடிக்கைகளை தமிழக அரசு தீவிரப்படுத்தியுள்ளது.

அதன் ஒரு பகுதியாக அமல்படுத்தப்பட்டுள்ள முழு ஊரடங்கு காரணமாக உணவின்றி பல ஆதரவற்றோர் தவித்து வருகின்றனர். இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்கெனவே, பசியால் யாரும் வாடக்கூடாது என்றும், கட்சியினர் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தியிருந்தார். இதனைத்தொடர்ந்து கரூர் மாவட்டம் முழுவதும் அமைச்சர் செந்தில் பாலாஜி தளபதி கிச்சன் அமைப்பு மூலமாக ஆதரவற்றோருக்கு உணவு வழங்கும் திட்டத்தினை இன்று தொடங்கி வைத்துள்ளார்.

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 30,016 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement:

Related posts

காதலிப்பதாகக் கூறி நண்பர்களுடன் சேர்ந்து சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபர்!

Jeba

கொரோனாவால் மகாராஷ்டிராவில் ஒரேநாளில் 920பேர் உயிரிழப்பு!

Saravana Kumar

சென்னைக்கு வந்த 13-வது ஆக்சிஜன் ரயில்!