காமெடி நடிகர் கிறிஸ் ராக்குடன் நடிகரும் தனது கணவருமான வில் ஸ்மித் சமரசம் செய்துகொள்ள வேண்டும் என்று ஜடா பிங்கெட் ஸ்மித் விருப்பம் தெரிவித்தார்.
இந்த ஆண்டு ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழாவில் மனைவி ஜடா பிங்க்கெட்டை கேலி செய்த காமெடி நடிகர் கிறிஸ் ராக்கை நடிகர் வில் ஸ்மித் மேடைக்குச் சென்று அறைந்தார். இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த விவகாரம் தொடர்பாக ஏற்கனவே சில நிகழ்ச்சிகளில் மறைமுகமாக ஜடா பிங்கெட் ஸ்மித் பேசியிருக்கிறார். இருப்பினும், நேரடியாக அவர் இப்போது தான் கருத்து தெரிவித்திருக்கிறார். நிகழ்ச்சி ஒன்றில் இதுகுறித்து அவர் பேசியபோது, “வில் ஸ்மித்தும், கிறிஸ் ராக்கும் புத்திசாலிகள். அவர்கள் இருவரும் சமரசம் செய்துகொள்ள வேண்டும்.” என்றார். முடிகொட்டும் பாதிப்பால் ஜடா அவதிப்பட்டு வருகிறார். இதனால், சில ஆண்டுகலாக அவரது தலையை மொட்டை அடித்து வருகிறார். இந்த சூழலில், ஆஸ்கர் விருதுகள் விழாவில் ஜடாவின் மொட்டைத் தலையை குறிப்பிட்டு கிறிஸ் ராக் காமெடியாக பேசினார். இதனால், தனது மனைவியை கேலி செய்ததால் ஆத்திரமடைந்த வில் ஸ்மித் மேடைக்கு சென்று கிறிஸ் ராக் கன்னத்தில் அறைந்தார். இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியது.
ஆஸ்கர் விருது விழாவில் வில் ஸ்மித்துடன் ஜடாவும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, தான் உணர்ச்சிவசப்பட்டு அவரது கன்னத்தில் அறைந்துவிட்டேன் என்று கூறிய வில் ஸ்மித், தனது செயலுக்காக மன்னிப்பு கோரினார் என்பது குறிப்பிடத்தக்கது.







