யானைகள் வேட்டையாடுவது அதிகரிப்பா? மத்திய அமைச்சர் பதில்

இந்தியாவில் யானைகள் கடந்த 2018 முதல் 2021 வரையிலான காலகட்டத்தில் 29 யானைகள் வேட்டையாடப்பட்டுள்ளதாக மத்திய வனத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் யானை தந்தம் கடத்தப்படுவது கடந்த மூன்று ஆண்டுகளில் அதிகரித்துள்ளதா? தந்தத்திற்காக ஆண்…

இந்தியாவில் யானைகள் கடந்த 2018 முதல் 2021 வரையிலான காலகட்டத்தில் 29 யானைகள் வேட்டையாடப்பட்டுள்ளதாக மத்திய வனத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் யானை தந்தம் கடத்தப்படுவது கடந்த மூன்று ஆண்டுகளில் அதிகரித்துள்ளதா? தந்தத்திற்காக ஆண் யானைகள் வேட்டையாடப்படுவது அதிகரித்து உள்ளதா? என மக்களவையில் உறுப்பினர் ஒருவர் எழுத்துப்பூர்வமாக கேள்வி எழுப்பியிருந்தார்.

இதற்கு பதில் அளித்துள்ள மத்திய வனம் சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலைத்துறை இணை அமைச்சர் அஸ்வினிகுமார் சவுபே, கடந்த 2019ம் ஆண்டில் யானை தந்தங்கள் கடத்தியதாக 27 வழக்குகளும், 2020ம் ஆண்டில் 21 வழக்குகளும், 2021ம் ஆண்டில் 42 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் 2018-19ம் ஆண்டில் ஜார்க்கண்ட், மேகாலயா, தமிழ்நாடு, உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் தலா 1 யானையும் ஒடிசா மாநிலத்தில் 2 யானை என மொத்தம் 6 யானைகள் யானைகள் வேட்டையாடப்பட்டுள்ளன.

2019-20ம் ஆண்டில் ஜார்க்கண்ட் மற்றும் கேரளாவில் தலா 1 யானையும், மேகாலயா மாநிலத்தில் 4 யானைகளும் ஒடிசா மாநிலத்தில் 3 யானைகள் என மொத்தம் 9 யானைகள் வேட்டையாடப்பட்டுள்ளது. மேலும், 2020-21ம் ஆண்டில் நாகலாந்து, ஒடிசா, தமிழ்நாடு தலா 2 யானைகளும் மேகாலயா மாநிலத்தில் 7 யானைகளும், கேரளாவில் 1 யானை என மொத்தம் 14 யானைகள் வேட்டையாடப்பட்டுள்ளதாகவும் மத்திய அரசின் எழுத்துபூர்வ பதிலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழகத்தை பொறுத்தவரை 2018-19 ஆண்டில் 1 யானை வேட்டையாடப்பட்டுள்ளதாகவும், 2019-20ம் ஆண்டில் எந்த ஒரு யானையும் தமிழகத்தில் வேட்டையாடப்படவில்லை எனவும் 2020-21ம் ஆண்டில் 2 யானைகள் வேட்டையிடப்பட்டுள்ளதாகவும் மத்திய வனத்துறை அமைச்சகத்தின் எழுத்துப்பூர்வ பதிலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.