உயிர் மூச்சு உள்ளவரை அதிமுகவிலிருந்து விலகமாட்டேன் என முன்னாள் அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
திருவள்ளூர் தெற்கு மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் ஆவடியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஆவடி முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான பாண்டியராஜன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். கூட்டத்தில் பேசிய அவர் வரும் உள்ளாட்சித் தேர்தலில் நிச்சயமாக ஆவடி மநகராட்சி சேர்மன் பதவியைப் அதிமுக பிடிக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தொழில் ரீதியாக தனக்கு ஒரு நிறுவனத்தில் உயர் பதவி வழங்கப்பட்டுள்ளதை தான் ஐந்து வருடங்களுக்கு கட்சியை விட்டு ஒதுங்கிக் கொள்வதாக தவறாக புரிந்து கொள்ளப்பட்டதாகவும், உயிர் மூச்சு உள்ளவரை அதிமுகவிலிருந்து விலகமாட்டேன் என்றும் தெரிவித்தார்.