முக்கியச் செய்திகள் சினிமா

’எனக்கு பிடித்த நடிகர்..’ விஜய் சேதுபதியை புகழும் ராசி கண்ணா

நடிகை ராசி கண்ணா, விஜய் சேதுபதியுடன் மூன்றாவது முறையாக இணைகிறார்.

இந்தியில் வெளியான மெட்ராஸ் கபே படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் ராசி கண்ணா. பின்னர் தெலுங்குக்கு வந்த அவர், அங்கு பல படங்களில் நடித்தார். மலையாள படங்களில் நடித்து வரும் ராசி கண்ணா, அஜய் ஞானமுத்து இயக்கிய, ’இமைக்கா நொடிகள்’ படம் மூலம் தமிழுக்கு வந்தார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்தப் படத்தை அடுத்து ஜெயம் ரவியுடன் அடங்கமறு, விஷாலுடன் அயோக்யா, விஜய் சேதுபதியுடன் சங்கத்தமிழன் ஆகிய படங்களில் நடித்தார். இப்போது விஜய் சேதுபதியுடன் ’துக்ளக் தர்பார்’, சுந்தர்.சியின் ’அரண்மனை’, கார்த்தியின் ’சர்தார்’ படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் விஜய் சேதுபதியுடன் மீண்டும் நடிப்பதாக ராசி கண்ணா தெரிவித்துள்ளார். எனக்குப் பிடித்த நடிகர்/ மனிதருடன் மூன்றாவது முறையாக நடிக்கிறேன். இந்த முறை இந்தியில். அரங்குக்கு வரும் அவரை வரவேற்கிறேன் என்று புகழ்ந்து கூறியுள்ளார்.

விஜய் சேதுபதியில் இந்தி வெப்சீரிஸ் ஒன்றில் நடித்து வருகிறார். இதில் இந்தி நடிகர் ஷாகித் கபூர் உட்பட பலர் நடிக்கின்றனர். இதில் ராசிகண்ணா முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இதன் படப்பிடிப்பில் இப்போது விஜய் சேதுபதி கலந்துகொண்டிருக்கிறார். ’த பேமிலிமேன்’ தொடரை இயக்கிய ராஜ் மற்றும் டீகே இந்த தொடரை இயக்குகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

“அரக்கோணம் கொலை குற்றவாளிகளை குண்டர் சட்டத்தில் கைது செய்க” -திருமாவளவன்

Halley Karthik

கற்றல் இடைவெளியை போக்கவே, இல்லம் தேடி கல்வித் திட்டம்: அமைச்சர் அன்பில் மகேஸ்

G SaravanaKumar

நண்பனின் கொலைக்கு பழிக்கு பழி; தந்தை-மகன் உள்பட 5 பேர் கைது

G SaravanaKumar