கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு மட்டுமே பொது இடங்களில் அனுமதி என தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
கொரோனா பாதிப்புக்கு உள்ளானவர்களால் பிறருக்கு நோய்த்தொற்று பரவுவதை தடுக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அதன்படி கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு மட்டுமே பொது இடங்களில் அனுமதி என பொது சுகாதார சட்டத்தில் திருத்தம் செய்து அரசாணை வெளியிட்டுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அதில், வழிபாட்டு தலங்கள், பள்ளி, கல்லூரிகளில் கொரோனா தடுப்பூசி செலுத்தியவர் களுக்கு மட்டுமே அனுமதி என தெரிவிக்கப்பட்டுள்ளது. கல்லூரிகள், திரையரங்குகள், மார்க்கெட், வணிக வளாகங்கள் உள்ளிட்ட இடங்களிலும் கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என உரிமையாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் முகக் கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் எனவும் தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.