25.5 C
Chennai
September 24, 2023
முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள் விளையாட்டு

சென்னை, மும்பை அணியைத் தொடர்ந்து 2வது முறை சாம்பியன் பட்டத்தை தக்க வைக்குமா குஜராத் டைட்டன்ஸ்..?

சென்னை, மும்பை அணியைத் தொடர்ந்து 2வது முறை சாம்பியன் பட்டத்தை தக்க வைக்குமா குஜராத் டைட்டன்ஸ் என்பது குறித்து  விரிவாக காணலாம்.

ஐபிஎல் தொடரின் 16வது சீசன் கோலாகலமாகத் தொடங்கி, தற்போது அதன் இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ளது. பிளே ஆஃப் , குவாலிஃபயர் 1, குவாலிஃபயர் 2 போட்டிகள் நிறைவடைந்த நிலையில் இறுதிப் போட்டியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் குஜராத் அணியும் எதிர்கொள்ள உள்ளன.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

தொடர்ச்சியாக சாம்பியன்ஸ் பட்டத்தை தக்க வைத்த அணிகள் :

ஐபிஎல் போட்டியில் இதுவரை அதிகபட்சமாக மும்பை இந்தியன்ஸ் அணி 5 முறையும் , சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4 முறையும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 2 முறையும் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. இதில் மும்பை அணி தொடர்ச்சியாக 2019 மற்றும் 2020ல் நடைபெற்ற ஐபிஎல் போட்டிகளில் அடுத்தடுத்து சாம்பியன் பட்டத்தை வென்றது.

அதேபோல சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் 2010 மற்றும் 2011ம் ஆண்டில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் அடுத்தடுத்து சாம்பியன்ஸ் பட்டத்தை வென்றது. இதன் மூலம்  நடப்பு சாம்பியன்களாக இருந்து ஐபிஎல் போட்டியில் தொடர்ந்து வெற்றி பெற்ற அணிகள் என்ற பெருமையை மும்பை மற்றும் சென்னை அணிகள் பெற்றுள்ளன.

நடப்பு சாம்பியன்ஸ் அணி இந்த முறையும் வெற்றி பெறுமா..?

கடந்த 2021 இல் நடைபெற்ற  ஐபிஎல் ஏலத்தில் பிரபல ஐபிஎல் வீரர்களை  விலைக்கு   வாங்கி கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் கால் பதித்தது ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி. முதல் போட்டியை எதிர்கொண்டது  மட்டுமல்லாமல் அறிமுகமான முதல் ஆண்டிலேயே சாம்பியன் பட்டம் வென்று, அனைவரது கவனத்தையும் தன் வசப்படுதியது.

கடந்த வருடத்தில் ஐபிஎல் எதிர்பார்ப்புகளுடன் இந்த வருடத்திற்கான முதல் ஐபிஎல் போட்டியில் சென்னை அணியும் நடப்பு சாம்பியனான குஜராத் அணியும் மோதின. அதிரடியாக விளையாடிய குஜராத் சென்னை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்தது.

அதிரடியாக ஆட்டத்தை வெளிப்படுத்திய குஜராத் அணி  பிளே ஆஃப் ரேசில முதலிடம் பிடிக்க வேண்டும் என  முயற்சி செய்து சுப்மன் கில் எனும் சிறப்பான ஆட்டக்காரரை கையில் வைத்துக் கொண்டு பஞ்சாப், லக்னோ, மும்பை, கொல்கத்தா, ராஜஸ்தான், ஹைதராபாத், பெங்களூரு என ஒவ்வொரு அணியையும்  வெற்றிக் கண்டு நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் பிளே சுற்றுக்கு முதல் அணியாக தகுதி பெற்றது.

இந்த தொடரிலேயே குறைந்த தோல்விகளை மட்டுமே பதிவு செய்துள்ள குஜராத் அணிக்கு சுப்மன் கில்லின் அசாத்திய ஆட்டத்தால் ஆரஞ்சு கேப்பை தக்கவைத்துள்ளது. அதேபோல முகமது சமி சிறப்பான பந்து வீச்சினால் பர்ப்பிள் கேப்பும் குஜராத் டைட்டன்ஸ் கைவசமே உள்ளது. மேலும் ஹர்திக் பாண்ட்யாவின் கேப்டன்ஸியும் அந்த அணிக்கு கூடுதல் பலத்தை கொடுத்துள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ் –  குஜராத் டைட்டன்ஸ் அணி எதிர் கொள்ளும் இறுதி போட்டி குஜராத் அணியின் ஹோம் கிரவுண்டான அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற உள்ளது. இதுவரை அகமதாபாத் மைதானத்தில் விளையாடிய போட்டிகள் குஜராத் அணிக்கு கை கொடுத்துள்ளன.

சுப்மன் கில்லின் அதிரடி பேட்டிங்,  முகமது சமி, ரஷித் கான் பந்துவீச்சால் எதிரணியினரை கவுண்டர் அட்டாக் செய்வது,  அவ்வபோது வெளிப்படும் மோகித் சர்மா மற்றும் நூர் அகமதுவின்  சிறப்பான ஆட்டங்கள் ஆகியவை குஜராத் அணிக்கு வெற்றி வாய்ப்பு உள்ளதாக சொல்லப்படுகிறது.

சிறப்பான பேட்ஸ்மன்கள் மற்றும் பவுலர்களை கொண்டுள்ள நடப்பு சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் அணி இந்த முறையும் சென்னையை வீழ்த்தி வெற்றி வாகை சூடுமா..? அதன் மூலம் தொடர்ச்சியாக அடுத்தடுத்து சாம்பியன் பட்டம் வென்ற சென்னை, மும்பை அணிகளின் பட்டியலில் இடம்பெறுமா என்பது இன்று தெரிந்துவிடும்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:

Share to KooShare to WhatsappShare to PinterestShare to TelegramShare to Print

Related posts

முகக்கவசம் அணிவதை மீண்டும் கட்டாயமாக்கிய உத்தரபிரதேசம்

Arivazhagan Chinnasamy

கொரோனா நம்மை துரத்தி கொண்டு இருக்கிறது- அமைச்சர்

G SaravanaKumar

”பிள்ளைகளை வைத்து மிரட்டுகிறார்” – முன்னாள் மனைவி குறித்து நடிகர் நவாசுதீன் சித்திக்

Web Editor