2 பேரைக் கொன்ற ஒற்றை காட்டு யானை : வனத்துறை எச்சரிக்கை

இரண்டு பேரைக் கொன்ற, ஒற்றை காட்டு யானை, ஓசூர் அருகே முகாமிட்டுள்ளதால், பாதுகாப்பாக இருக்கும்படி வனத்துறையினர் எச்சரித்துள்ளனர் கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளி அருகே கிராம பகுதிக்குள் புகுந்த ஒற்றை காட்டு யானை, அந்தப் பகுதியில்…

இரண்டு பேரைக் கொன்ற, ஒற்றை காட்டு யானை, ஓசூர் அருகே முகாமிட்டுள்ளதால், பாதுகாப்பாக இருக்கும்படி வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளி அருகே கிராம பகுதிக்குள் புகுந்த ஒற்றை காட்டு யானை, அந்தப் பகுதியில் விவசாயிகள் இரண்டு பேரை மிதித்து கொன்றது. இதையடுத்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டப்பட்ட அந்த ஒற்றை யானையின் நடமாட்டத்தை வனத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வந்தனர்.

இந்நிலையில் அந்த யானை கரியானபள்ளி, உங்கட்டி, அத்திமுகம், வெங்கடேசபுரம், முத்தாலி, போடூர், பீர்ஜெபள்ளி உள்ளிட்ட கிராமங்கள் வழியாக சுமார் முப்பது கிலோ மீட்டர் கடந்து தற்போது சானமாவு வனப்பகுதியில் ராமச்சந்திரம் கிராமத்தின் அருகே முகாமிட்டுள் ளது.

அந்த யானை ஆக்ரோஷத்துடன் காணப்படுவதாகவும் இதனால் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு வனத்துறையினர் எச்சரித்துள்ளனர். வனப்பகுதியை ஒட்டியுள்ள இடங்களுக்கு விவசாயிகள் செல்ல வேண்டாம் எனவும் ஒலிபெருக்கி வாயிலாக அவர்கள் கூறியுள்ளனர். தவிர்க்க முடியாத காரணங்களால் விளைநிலங்களுக்கு செல்ல வேண்டுமானால் வனதுறைக்கு தகவல் தெரிவித்துவிட்டு செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.