முக்கியச் செய்திகள் தமிழகம்

வீட்டு வசதி குடியிருப்புகளை தரமாக கட்ட முதலமைச்சர் உத்தரவு: அமைச்சர் முத்துசாமி

வீட்டுவசதி வாரிய குடியிருப்புகளை, மக்களே விரும்பி வந்து குடியேறும் வகையில் தரமாக கட்டுவதற்கு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளதாக அமைச்சர் முத்துசாமி தெரிவித்தார்.

அதிமுக ஆட்சியின் போது சென்னை, ராமாபுரம் பாரதி சாலையில் ரூ.78 கோடியே 44 லட்சம் மதிப்பில் 384 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டி பயனாளர்களுக்கு 2019 ம் ஆண்டு ஒப் படைக்கப்பட்டது. இதில் 2 ஆண்டுகளாக மக்கள் வசித்து வருகின்றனர். இப்போது இந்த குடியிருப்பின் கட்டிடத்தை தொட்டாலே சிமென்ட் பூச்சு உதிர்கின்றன.

சுவர்கள், லிப்ட், மின்சாரம், குடிநீர் குழாய்கள், கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் என அனைத் தும் மோசமான நிலையில் இருப்பதாகவும் கட்டுமானத்தின் தரத்தை உறுதிப்படுத்த வேண் டும் எனவும் குடியிருப்போர் புகார் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் வீட்டுவசதி வாரியத்துறை அமைச்சர் முத்துசாமி, நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு, எம்எல்ஏக்கள் காரம்பாக்கம் கணபதி, பிரபாகர் ராஜா மற்றும் வீட்டுவசதி வாரிய துறை அதிகாரிகள் அடுக்குமாடி குடியிருப்பை ஆய்வு செய்தனர். முன்னதாக அங்கு குடியி ருப்போரிடம் அமைச்சர் குறைகளை கேட்டறிந்தார்.

அப்போது அவர் பேசும்போது, ‘வீட்டுவசதி துறை சார்பில் கட்டப்பட்டுள்ள குடியிருப்புகளில் உள்ள குறைகள் குறித்து புகார்கள் வந்துள்ளன. இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். வீட்டுவசதி வாரிய குடியிருப்பு என்றாலே பொதுமக்கள் ஒரு மாதிரியாக பார்க்கிறார்கள். இந்த நிலையை மாற்றி வீட்டுவசதி வாரிய குடியிருப்பு களை மக்களே விரும்பி வந்து குடியேறும் அளவுக்கு தரமாக கட்ட வேண்டும் என்று முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். மக்கள் தெரிவித்துள்ள பிரச்சனைகளில் சரி செய்வதற் கான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இந்த ஆய்வின் போது கே.கே.நகர் திமுக செயலா ளர் கண்ணன் மற்றும் திமுக நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Advertisement:
SHARE

Related posts

காதலால் இணைந்த விஷ்ணு விஷால்- ஜுவாலா குட்டா: பிரத்யேக திருமணப் புகைப்படங்கள்

Halley karthi

பதக்கம் பெற்ற படைவீரரின் பரிதாப நிலை!

Halley karthi

அரசு பேருந்தில் பயணம் செய்த ஆளுநர் தமிழிசை!

Jeba Arul Robinson