மத்திய – மாநில உறவுகளை ஆய்வு செய்வதற்காக கடந்த திமுக ஆட்சியில் ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி குரியன் ஜோசப் தலைமையில் உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழு கலைக்கப்பட்டதற்காக தவெக அரசுக்கு திமுகவினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் மத்திய – மாநில உறவுகளை ஆய்வு செய்வதற்காக அமைக்கப்பட்ட உயர்மட்ட குழு கலைக்கப்பட்டது ஏன்? என சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமார் விளக்கமளித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறியிருப்பதாவது, “பெரியார் நூலக ஊழல்” விவகாரத்திலிருந்து திசைதிருப்ப ஏதாவது ஒரு விஷயத்தை நீங்கள் தேடிக்கொண்டிருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். Better luck next time
@mkstalin sir..
ஒன்றிய – மாநில உறவுகள் தொடர்பான குழு குறித்து:
“ஒன்றிய – மாநில உறவுகளை நிர்வகிப்பதற்காக முந்தைய அரசால் அமைக்கப்பட்ட குழுவில் 3 உறுப்பினர்கள் இடம்பெற்றிருந்தனர். அதில் ஒருவர் 04.05.2026 அன்று ராஜினாமா செய்தார்.
அண்ணன் விஜய் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு, புதிய சட்ட ஆணையத்தை (Law Commission) அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டது .
இதுதொடர்பாக நிபுணர்களின் கருத்துகளைக் கேட்டறிந்ததுடன், ஒன்றிய – மாநில உறவுகள் தொடர்பான பணிகளை மேலும் திறம்படச் செயல்படுத்தும் நோக்கிலும், 07.08.2026 அன்று புதிய சட்ட ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.(அரசாணை எண். 202, சட்டம் (LC) துறையின் பத்தி 3(c)-ஐப் பார்க்கவும்.)
புதிய சட்ட ஆணையத்தின் தலைவர் மற்றும் முழுநேர உறுப்பினர்கள்:
தலைவர்:
மணிப்பூர் உயர் நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி மாண்புமிகு நீதியரசர் டி. கிருஷ்ணகுமார்.
முழுநேர உறுப்பினர்கள்:
சென்னை உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி மாண்புமிகு நீதியரசர் டீக்கா ராமன்.
திரு. டி.கே. ராமச்சந்திரன், ஐ.ஏ.எஸ்.,
(அரசின் முன்னாள் கூடுதல் தலைமைச் செயலாளர்.)
திரு. ஏ. அருணகிரி, சட்டத்துறையின் முன்னாள் அரசுச் செயலாளர்.
பகுதிநேர உறுப்பினர்கள்:
திரு. பி. மோகன்தாஸ், (முன்னாள் மாவட்ட நீதிபதி.)
திரு. ஆர். கோவிந்தராஜன், (முன்னாள் மாவட்ட நீதிபதி.)
இவ்வாறு புதிய சட்ட ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.”
இவ்வாறு அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.




