முக்கியச் செய்திகள் தமிழகம்

சாலை விபத்து – 4 பேர் உயிரிழப்பு

ராமேஸ்வரத்தை அடுத்த மரைக்காயர் பட்டிணத்தில், இருசக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில், நடைபயிற்சி மேற்கொண்டவர் உட்பட 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

மரைக்காயர் பட்டிணத்தில் உள்ள பெட்ரோல் பங்கில் வேலை செய்யும் ஜெகன், ஜெகதீஷ், மகேஷ் ஆகியோர் இன்று வழக்கம் போல் இருசக்கர வாகனத்தில் வேலைக்கு சென்றனர். அப்போது, கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து ராமேஸ்வரம் கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய, ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் காரில் வந்து கொண்டிருந்தனர். மரைக்காயர் பட்டிணத்தில், இருசக்கர வாகனம் மீது அதிவேகமாக வந்த கார் நேருக்கு நேராக மோதியது. இதில் இருசக்கர வாகனத்தில் பயணித்த 3 பேரும் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

அண்மைச் செய்தி: ‘ஏன் இந்த மொழி வெறி? – எம்பி கனிமொழி காட்டம்’

அந்த நேரம், நடைபயிற்சி மேற்கொண்டிருந்த ஓய்வு பெற்ற காவல்துறை சார்பு ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தியும் விபத்தில் சிக்கி காயமடைந்தார். தகவல் அறிந்து உடனடியாக அங்கு வந்த காவல்துறையினர் மற்றும் 108ல் இருந்த மருத்துவர்கள் காயம் அடைந்தவர்களை ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் கொண்டு சென்றனர். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி மேலும் ஒருவர் உயிரிழந்ததை அடுத்து பலி எண்ணிக்கை 4ஆக உயர்ந்துள்ளது. இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Advertisement:
SHARE

Related posts

சிறையில் ஊட்டச்சத்து உணவு கேட்ட மல்யுத்த வீரர் சுஷில் குமார்!

“சுங்கக் கட்டண வசூல் அதிகரிப்பு; விசாரணைக்கு ஆணையிட வேண்டும்”-அன்புமணி ராமதாஸ்

Halley Karthik

பெகாசஸ் விவகாரம்; சிறப்பு நிபுணர் குழுவை அமைத்தது உச்சநீதிமன்றம்

Saravana Kumar