மகாராஷ்டிரா, ஹரியானா போல் தமிழ்நாட்டால் தொழில் முதலீடுகளை ஏன் ஈர்க்க முடியவில்லை என்று தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கேள்வி எழுப்பி உள்ளார்.
தமிழ்நாட்டில் உள்ள தொழில் நிறுவனங்களில் பணியாற்றும் சிறந்த மனிதவள
மேலாண்மைத் துறை அலுவலர்களுக்கு ( HR ) விருது வழங்கும் நிகழ்ச்சி சென்னை
கிண்டியில் நடைபெற்றது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
FICCI அமைப்பு முன்னெடுத்த நிகழ்வில் பங்கேற்று சிறந்த HR அதிகாரிகளுக்கு
விருது வழங்கி கௌரவித்த பின் மேடையில் பேசிய தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி,
கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா வைரஸ் ஏற்படுத்திய தாக்கத்தில் இருந்து இந்தியா
படிப்படியாக மீண்டு வருவதாகவும், பிற அனைத்தையும் விட மனிதர்கள், மனிதர்களின்
நலன்களே பிரதானம் என்றும் குறிப்பிட்டார்.
அவர் மேலும் பேசியதாவது:
மனிதர்கள் வளங்கள் அல்ல என்றும் அவர்கள் உணர்வுகள், பிணைப்புகள், கலாசார
செறிவு மிக்கவர்கள். மேற்கத்திய நாடுகளில் இருந்து பரவிய மனிதவளம் என்ற சொல்லை தற்காலத்திலும் தொடர்ந்து பயன்படுத்துவது பற்றி மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
இந்தியாவின் ஒட்டுமொத்த ஆற்றல் அதிகரித்துள்ளதாகவும், பல இளைஞர்கள் ஸ்டார்ட்
அப் நிறுவனங்களை உருவாக்கி வருவதாகவும், 2047-ல் 100-வது சுதந்திர தினத்தைக்
கொண்டாடும் போது பல மடங்கு வளர்ச்சி பெற்ற நாடாக இந்தியா இருக்கும். வறுமை ஒழிக்கப்பட்டாலும் வளங்களை மேலும் அதிகரிக்க வேண்டிய தேவை இருக்கிறது. அனைவருக்கும் வேலை – வளமான இந்தியா என்பதே இலக்கு. அதுவே இந்தியாவை உயர்த்தும். அதற்கு தொழிற்துறை வேகமாக வளர வேண்டும்.
பல வித வளங்கள் இருந்தும் மஹாராஷ்டிரா, ஹரியானா போல் ஏன் தமிழ்நாட்டினால்
தொழில் முதலீடுகளை ஈர்க்க முடியவில்லை. இந்தியாவுக்காக தமிழ்நாடு வளர வேண்டும். முன்னேறிச் செல்ல வேண்டும். அதற்கு அனைவரும் ஒற்றுமையாக உழைக்க
வேண்டும் என்று ரவி பேசினார்.
-மணிகண்டன்