முக்கியச் செய்திகள் இந்தியா

வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்ட பி.எஸ்.எல்.வி. சி-53 ராக்கெட்

பூமி கண்காணிப்பு செயற்கைக்கோளுடன் பி.எஸ்.எல்.வி. சி-53 ராக்கெட் இன்று மாலை 6 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது.

இதற்கான 25 மணி நேர கவுண்ட்டவுன் நேற்று மாலை 5 மணிக்கு தொடங்கியது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) பி.எஸ்.எல்.வி. மற்றும் ஜி.எஸ்.எல்.வி. ரக ராக்கெட்டுகளில் செயற்கைக்கோள்களை பொருத்தி விண்ணில் ஏவி வருகின்றது. தற்போது எடை குறைந்த செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவுவதற்காக எஸ்.எஸ்.எல்.வி. ரக ராக்கெட்டுகளையும் வடிவமைத்து வருகின்றது.

இந்நிலையில், ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இருந்து இன்று மாலை 6 மணிக்கு பி.எஸ்.எல்.வி. சி-53 ராக்கெட் விண்ணுக்கு ஏவப்பட்டது.

இது பி.எஸ்.எல்.வி. ரகத்தில் 55-வது ராக்கெட்டாகும். 2-வது ஏவுதளத்தில் இருந்து ஏவப்பட்ட பி.எஸ்.எல்.வி. ரகத்தில் 16-வது ராக்கெட் ஆகும். 44.4 மீட்டர் உயரம் கொண்ட இந்த ராக்கெட், பூமியில் இருந்து 570 கிலோ மீட்டர் தூரத்தில் நிலைநிறுத்தப்படுகிறது.

மேலும், இந்த ராக்கெட்டில் 365 கிலோ எடை கொண்ட சிங்கப்பூர் நாட்டைச் சேர்ந்த எலக்ட்ரோ-ஆப்டிக் செயற்கைக்கோள் என்ற பூமி கண்காணிப்பு செயற்கைக்கோள் பொருத்தப்பட்டுள்ளது.

இந்த செயற்கைக்கோள் அதிக தெளிவுதிறன் மற்றும் ஒரே நேரத்தில் பல கோணங்களில் பூமியை பார்க்கும் வசதி கொண்டது. மேலும் இது கடல்சார் பாதுகாப்பு மற்றும் எண்ணெய் கசிவு கண்டறிதல் போன்ற பிரச்னைகளை சிறப்பாக கண்டறியும் வகையில் வடிவமைப்பு கொண்டது.

இந்த செயற்கைக்கோளுடன், சிங்கப்பூரின் மற்றொரு செயற்கைக்கோளான 155 கிலோ எடை கொண்ட நியூசர் செயற்கைக்கோள் சிந்தடிக் அப்ரேச்சர் ரேடார் தொழில்நுட்பத்தில் இயங்கக் கூடியது. 2.8 கிலோ எடை கொண்ட சிங்கப்பூரின் நான்யாங் தொழில்நுட்ப பல்கலைக்கழக மாணவர்கள் வடிவமைத்த ஸ்கூப்-1 என்ற செயற்கைகோளும் விண்ணில் செலுத்தப்பட்டது.

மேலும் செயற்கைக்கோள்களை திட்டமிட்ட சுற்றுப்பாதையில் நிலைநிறுத்திய பின்னர் பி.எஸ்.எல்.வி ராக்கெட்டின் இறுதிப் பாகமான பி.எஸ்-4 இயந்திரம் மூலம் சுற்றுப்பாதையுடன் பூமியை நிலையானதாகச் சுற்றும் சோதனைத் தொகுதி ஒன்றும் ராக்கெட்டில் பொருத்தி ஏவப்படுகிறது. இதன்மூலம் எதிர்காலத் தேவைக்கான சில பரிசோதனை முயற்சிகளும் மேற்கொள்ளப்பட உள்ளது.

மேலும் இஸ்ரோ தலைவராக சோம்நாத் பொறுப்பேற்ற பிறகு விண்ணில் ஏவப்படும் இரண்டாவது ராக்கெட் இதுவாகும். கொரோனா தொற்று காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக பொதுமக்கள் மற்றும் பத்திரிகையாளர்களுக்கு அனுமதி வழங்கப்படாத நிலையில், இந்த ஆண்டு அனுமதி வழங்கபட்டது.

பி.எஸ்.எல்.வி. சி-53 ராக்கெட்டுக்கான 25 மணி நேர கவுண்ட்டவுன் நேற்று மாலை மாலை 5 மணிக்கு தொடங்கியது. சரியாக இன்று மாலை 6 மணிக்கு பி.எஸ்.எல்.வி சி – 53 ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது. வெற்றிகரமாக ஏவப்பட்டதாக இஸ்ரோ தனது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கிட்ட தொகுதிகள் விவரம்!

Gayathri Venkatesan

இன்று முதல் திருப்பதியில் இலவச தரிசனத்திற்கு அனுமதி

G SaravanaKumar

தெலங்கானாவில் ஆகஸ்ட் 1 முதல் படப்பிடிப்புகள் நிறுத்தம்

Arivazhagan Chinnasamy