முக்கியச் செய்திகள் தமிழகம் சினிமா

தூக்குதுரையை தூக்கி Vibe செய்யும் இணையவாசிகள்

80களில் தமிழ் சினிமாவை கொளுத்தியெடுத்த எஸ்.பி. முத்துராமன் – ரஜினிகாந்த் காம்போ போல 2010-களில் ஒரு புதியதொரு சரித்திரத்தை படைக்க கிளம்பியதுதான் அஜித் – சிவா காம்போ. தமிழ் சினிமா வரலாற்றில் மசாலாப் படங்கள் என்றால் திரைக்கதையை வலுவாக கட்டமைத்துவிட்டு பிறகு ஆக்‌ஷன் சென்டிமெண்ட் பாடல்கள் என மலைச்சாரல் போல மசாலா தூவுவார்கள். ஆனால் சிறுத்தை சிவாவோ அண்டா முழுக்க மசாலாவை போட்டு கொதிக்க வைத்துவிட்டு கடைசியாக கொஞ்சம் திரைக்கதையை தூவி புதியதொரு ஃபார்முலாவை உருவாக்கினார். இந்த பார்முலாவின் முதல் டிஷ்(dish)ஆன வீரம் படத்தை ஆடியன்ஸ் விரும்பி சாப்பிடவே இதே receipie-யில் மும்பை, பல்கேரியா போன்ற புதிய essence-களை சேர்த்து அடுத்தடுத்து வெற்றிகளை கொடுக்க சிவா-அஜித் எடுத்த முயற்சியில் வேதாளம் வலுவாக கையை சுட்டுவிட்டது. இந்த சூட்டுக்கு பர்னால் போடும் படமாக உருவாக்கப்பட்டதுதான் விஸ்வாஸம் என்பது சினிமா விமர்சகர்களின் கருத்தாக இருந்தது.

அப்பா – மகள் சென்டிமெண்டை வைத்து இவர்கள் உருவாக்கிய விஸ்வாஸம் அதன் எமோஷன் காட்சிகளுக்காக வெற்றி வசூலை வாரிக்குவித்தது. இதைப்பார்த்து வியந்த சூப்பர் ஸ்டாரேகூட சிறுத்தை சிவாவுக்குள் ஒரு எஸ்.பி.முத்துராமன் இருப்பதை கண்டு ஆச்சரியப்பட்டாரோ என்னமோ உடனே அவரை அழைத்து பேசி அடுத்த படத்தை கமிட் செய்தார். WWE-யில் Udertaker-இடம் சிக்கிய Ric flair (ரிக் பிளேயர்) போல் ஆனது அந்த சம்பவம் என்பது தனிக்கதை.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

விஸ்வாசம் படத்தின் வெற்றிக்கு மற்றுமொரு முக்கிய காரணம் அதன் பாடல்கள் தான். இதில் இடம் பெற்ற கண்ணான கண்ணே பாடலுக்காக தேசிய விருது பெற்றார் டி. இமான். இப்படத்தில் இடம்பெற்ற மற்றுமொரு பொண்ணான பாடல் தான் ‘அடிச்சி தூக்கு’. மகளை பார்க்க பாம்பேவுக்கு செல்லும் தூக்குதுரை அங்கிருக்கும் மக்களை அங்காளி பங்காளி ஆக்கி குத்தாட்டம் போட்டிருப்பார். பொதுவாக அஜித்துக்கு நடனம் வராது என விஜய் ரசிகர்களும் அஜித் வெறுப்பாளர்களும் கலாய்ப்பதுண்டு. அவர்களின் வாயை அடைக்கும் வகையில் வேட்டியை மடித்துக்கட்டிக்கொண்டு, ‘டரக்கு டக்கிட டரக்கு டக்கிட டரக்கு டக்கிட டரக்கு டரக்கு’ என பொளந்து கட்டியிருப்பார் அஜித். இந்த ருத்ர தாண்டவ நடன காட்சிகள் தான் தற்போது இணையதையே கொளுத்தி எடுத்து வருகிறது.

இந்த ஆண்டின் தொடக்கம் முதலே vibe-எனும் புதிய கலாச்சாரத்தை ட்ரெண்ட் செய்து வருகின்றனர் இணையவாசிகள். அதாவது MSV, இளையராஜா, ரஹ்மான், யுவன், ஹாரிஸ் என யாருடைய இசை துணுக்குகளை வேண்டுமானாலும் எடுத்து தனக்கு பிடித்த அல்லது பிடிக்காத காட்சிகளுடன் வெட்டி ஒட்டி உற்சாகமாகிக்கொள்ளலாம். இதன்மூலம் MSV பாடலுக்கு ப்ரூனோ மார்ஸையும், மைக்கேல் ஜாக்சன் பாடலுக்கு எம்,ஜி.ஆரையும் ஆட வைக்கலாம்.

மேலும், வடிவேலு வழுக்கி விழும் காட்சியிலும், அம்பி கரண்ட் கம்பத்தில் மோதும் காட்சியிலும் கூட பாடல்களை சொருகி சொர்கத்துக்கு செல்லலாம்.

இதன் நீட்சியாக இணையவாசிகள் இந்த வார கண்டெண்டிற்காக தூக்கிய பாடல் தான் ‘அட்சி தூக்கு பாடல். facebook ஒருவர், என்னுடைய edit skill என்னவென்று interview-வில் கேள்வி கேட்டால் இதை காண்பிப்பேன் எனக்கூறி ஒரு சீரியல் பாடலுக்கு தூக்குதுரை நடனமாடுவது போல தான் எடிட் செய்திருந்த வீடியோவை பதிவு செய்தார்.

அதிலிருந்து இந்த ட்ரெண்ட் இணையத்தை பற்றிக்கொண்டது. அடிச்சி தூக்கி பாடலுக்கு தூக்குதுரை(அஜித்) ஆடும் நடன காட்சிகளுக்கு தமிழ், தெலுங்கி, இந்தி , ஆங்கிலம், மலையாளம், கொரியன், சைனீஸ் என எல்லா மொழி பாடல்களையும் mix செய்து இணையத்தில் ட்ரெண்ட் செய்துவருகின்றனர் இணையவாசிகள்.

இதையெல்லாம் தாண்டி ஜிமிக்கி கம்மல் , மேல் மலையனூரு அங்காளியே, சிங்குச்சா சிங்குச்சா, Tigini உள்ளிட்ட சம்மந்தமே அற்ற வெவ்வேறு flavour பாடல்களையும் இந்த காட்சிகளுடன் வெட்டி ஒட்டியும் வைப் (vibe) செய்யப்படுகிறது. இதற்காகவே facebook-இல் சில group-களையும் உருவாக்கி தங்களுடைய கலைத் தாகத்தையும் vibe தாகத்தையும் தீர்த்துவருகின்றனர் இணையவாசிகள்.

– வேல் பிரசாந்த்

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

‘வளர்ச்சிக்குத் தடையாக இருப்பவற்றைத் தகர்த்து முன்னேறுங்கள்’ – முதலமைச்சர்

Arivazhagan Chinnasamy

6 மாதங்களில் ரூ.4.16 கோடி அபராதம் வசூல் – மதுரை ரயில்வே கோட்டம்

Halley Karthik

ரயில் நிலையங்களில் பயணிகள் முகக்கவசம் அணியாவிட்டால் அபராதம் விதிக்கப்படும்!

Halley Karthik