முக்கியச் செய்திகள் உலகம்

மாணவர்களுக்கான கனடா விசா நிராகரிப்பு ஏன்?

கனடா அரசு மாணவர்களுக்கான விசா விண்ணப்பங்களை கடந்த 2 வாரங்களாக தொடர்ச்சியாக நிராகரித்து வருகிறது.

கனடா, அமெரிக்கா போன்ற நாடுகளில் படிப்பது, வேலை செய்வது என்பது பலரின் கனவாக இருக்கிறது. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக உலக நாடுகள் அனைத்தும் வெளிநாட்டினருக்கு படிப்பு மற்றும் வேலைக்கான விசா வழங்குவதை தடை செய்தது.

தற்போது கொரோனா பரவல் கட்டுக்குள் வந்ததை தொடர்ந்து கொரோனா கட்டுப்பாடுகளை உலக நாடுகள் அனைத்தும் விலக்கியுள்ளன. இந்நிலையில், கனடா நாட்டிற்கு படிப்பிற்காக மாணவர்கள் விண்ணப்பிக்கும் விண்ணப்பங்களை அந்நாட்டு அரசு கடந்த 2 வாரங்களாக அதிக அளவில் நிராகரித்துள்ளது. இதில் IELTS தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள் மற்றும் ஏற்கனவே அந்நாட்டு கல்லூரிகளில் ஆன்லைன் படிப்புகளில் சேர்ந்திருப்பவர்களின் விண்ணப்பங்களும் நிராகரிக்கப்பட்டுள்ளன.

கொரோனா காலத்தில் 3 முதல் 3.5 லட்சம் அளவிலான விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளதாகவும், இந்த அளவிற்கான மாணவர்களை கனடாவால் கையாள முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மாணவர்களின் 10, 12ம் வகுப்பு மதிப்பெண்கள் குறைவாக இருப்பது, IELTS தேர்வில் மதிப்பெண் குறைவாக இருப்பது போன்ற காரணங்களாலும், சிலர் குறைவான மதிப்பெண் எடுத்திருந்தும் கடினமான பாடத்தை தேர்வு செய்வதாலும் நிராகரிக்கப்படுவதாக கூறப்படுகிறது.

மேலும் சொந்த நாடுகளில் வேலை வாய்ப்பு இல்லாதவர்கள் கனடாவில் வசிக்க விரும்புவதாலும் அவர்களுக்கு விசா மறுக்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Advertisement:
SHARE

Related posts

மேகதாது அருகே அணை: நிதி ஒதுக்கிய கர்நாடக அரசு – அமைச்சர் துரைமுருகன் கண்டனம்

Arivazhagan CM

புதிதாக அலுவலகங்கள் அமைக்கும் நிறுவனங்களுக்கு புதிய திட்டம்

Ezhilarasan

“கூட்டணிக்கு யார் வந்தாலும் அரவணைப்போம்” – கமல்ஹாசன் பேட்டி

Saravana Kumar