10ம் வகுப்பு பொதுத்தேர்வில் மொழிப்பாடத்தில் 42,024 மாணவர்கள் பங்கேற்கவில்லை என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
2021-22ம் கல்வி ஆண்டிற்கான 12 மற்றும் 10ம் வகுப்புகளுக்கான பொதுதேர்வு நடைபெற்று வருகிறது. 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் 9-ம் தேதி பொதுத்தேர்வு தொடங்க உள்ளது. 10-ம் வகுப்புக்கு வரும் 30-ம் தேதியும், 11-ம் வகுப்புக்கு வரும் 31-ம் தேதியும், 12-ம் வகுப்புக்கு வரும் 28-ம் தேதியும் பொதுத்தேர்வு முடிவடைகிறது.
இந்நிலையில், 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு 9,55,139 பேர் தேர்வெழுத பதிவு செய்திருந்தனர். தேர்வின் முதல்நாளான இன்று மொழிப்பாடத் தேர்வு நடைபெற்றது. இன்றைய தினம் நடந்த மொழிப்பாட தேர்வில் 42,024 மாணவர்கள் பங்கேற்கவில்லை என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
10ம்ம வகுப்பு பொதுதேர்விற்கு விண்ணப்பித்திருந்த 42,024 மாணவர்கள் ஏன் தேர்வு எழுத வரவில்லை என்று விசாரித்து, அதற்கான அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
நேற்று தொடங்கிய 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 32,674 பேர் பங்கேற்காத நிலையில், இன்று தொடங்கிய 10-ம் வகுப்பு தேர்வில் 42,024 மாணவர்கள் பங்கேற்கவில்லை என்பது கவனிக்கத்தக்கது.
Advertisement: