பட்டாசு ஆலை வெடி விபத்து; முதலமைச்சர் நிவாரணம் அறிவிப்பு

கடலூர் மாவட்டம் எம்.புதூர் பகுதியில் உள்ள நாட்டு வெடி தயாரிப்பு குடோனில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 2 பெண்கள் உட்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், உயிரிழந்தவரின்…

கடலூர் மாவட்டம் எம்.புதூர் பகுதியில் உள்ள நாட்டு வெடி தயாரிப்பு குடோனில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 2 பெண்கள் உட்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், உயிரிழந்தவரின் குடும்பத்தாருக்கு ஆறுதல் மற்றும் நிவாரண உதவிகளைத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

​கடலூர் மாவட்டம், எம்.புதூர் கிராமத்தில் உள்ள ஒரு பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் பெரியகரைக்காடு கிராமத்தைச் சேர்ந்த சித்ரா (வயது 35), நெல்லிக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த அம்பிகா (வயது 50) மற்றும் மூலக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த சத்தியராஜ் (வயது 34) ஆகிய மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதற்கு முன்னதாக தகவல் அறிந்து அங்குச் சென்ற போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர் 5 தீயணைப்பு வாகனங்கள் மூலம் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாகப் போராடி தீயை அணைத்தனர்.

அண்மைச் செய்தி: ‘2 நிமிடத்தில் Signature validate செய்வது எப்படி?’

இந்நிலையில், இந்த துயரமான செய்தியினை கேள்வியுற்று மிகுந்த வேதனையடைந்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உயிரிழந்தவரின் குடும்பத்தாருக்குத் தனது வருத்தத்தையும் ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துள்ளார். மேலும், இதே விபத்தில் காயமடைந்த நெல்லிக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த வசந்தா என்பவருக்குக் கடலூர் அரசு பொது மருத்துவமனையில் சிறப்பான சிகிச்சை வழங்கவும் அவர் உத்தரவிட்டுள்ள அவர், ​இந்த வெடிவிபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தாருக்கு தலா ரூபாய் மூன்று இலட்சம் நிதியுதவி முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.