95-வது ஆஸ்கர் விருது விழாவில் யார் யாருக்கு என்னென்ன விருது வழங்கப்பட்டது என்பது குறித்து விரிவாக தெரிந்து கொள்வோம்.
2023 ஆம் ஆண்டிற்கான 95வது ஆஸ்கர் விருது விழா மார்ச் 13 ஆம் தேதியான இன்று அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்றது. ஒவ்வொரு முறையும் ஆஸ்கர் விருது வழங்கும் போதும் இந்தியாவிலிருந்து அதற்கான கூடுதல் எதிர்பார்ப்பு எழுவதுண்டு. அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஹாலிவுட்டின் பிரபல டால்பி தியேட்டரில் இன்று இந்திய நேரப்படி காலை 5:30 மணிக்கு தொடங்கியது.
1.சிறந்த அனிமேஷன் திரைப்படம் – ‘கில்லர்மோ டெல் டோரோவின் பினோக்கியோ’
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
2. சிறந்த ஆவணப்படம் – ’நவால்னி’
3.சிறந்த துணை நடிகை – ஜேமி லீ கர்டிஸ் (எவ்ரிதிங் எவ்ரிவேர் ஆல் அட் ஒன்ஸ் திரைப்படத்திற்காக)
4.சிறந்த லைவ் ஆக்ஷன் குறும்படம் – ’அன் ஐரிஷ் குட்பை’
5.சிறந்த ஒளிப்பதிவு – ’ஆல் க்வயட் ஆன் தி வெஸ்டெர்ன் ஃபிரண்ட்’
6.சிறந்த துணை நடிகர் – கே ஹுய் குவான் (”எவ்ரிதிங் எவ்ரிவேர் ஆல் அட் ஒன்ஸ்” திரைப்படத்திற்காக)
7.சிறந்த சிகை அலங்காரம் மற்றும் ஒப்பனை – “ தி வேல்”
8.சிறந்த ஆடை வடிவமைப்பு – ”ப்ளாக் பான்தர் : வகாண்டா ஃபாரெவர்”
9.சிறந்த சர்வதேச திரைப்படம் – “ஆல் க்வயட் ஆன் தி வெஸ்டெர்ன் ஃபிரண்ட்”
10. சிறந்த ஆவண குறும்படம் – தமிழ்நாட்டில் தயாரிக்கப்பட்ட “தி எலிஃபண்ட் விஸ்பர்ஸ்”
11. சிறந்த அனிமேஷன் குறும்படம் – “தி பாய், தி மோல், தி ஃபாக்ஸ் அண்ட் தி ஹார்ஸ்”
12.சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு – ”ஆல் க்வயட் ஆன் தி வெஸ்டெர்ன் ஃபிரண்ட்”
13.சிறந்த பின்னணி இசை – “ஆல் கொயட் ஆன் தி வெஸ்டெர்ன் ஃபிரண்ட்”
14.சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ்- ’அவதார் : தி வே ஆஃப் வாட்டர்’
15. சிறந்த திரைக்கதை – ”எவ்ரிதிங் எவ்ரிவேர் ஆல் அட் ஒன்ஸ்”
16. சிறந்த தழுவல் திரைக்கதை – “உமன் டாக்கிங்”
17. சிறந்த பாடல் – ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தின் ”நாட்டு நாட்டு” பாடல்
18.சிறந்த ஒலிக்கான ஆஸ்கர் விருதை வென்றது ”டாப் கன் : மேவரிக்”
19.சிறந்த எடிட்டிங்- ”எவ்ரிதிங் எவ்ரிவேர் ஆல் அட் ஒன்ஸ்”
20.சிறந்த இயக்கம் – ”எவ்ரிதிங் எவ்ரிவேர் ஆல் அட் ஒன்ஸ்”
21.சிறந்த நடிகர் – ’தி வேல்’ படத்திற்காக வென்றார் பிரெண்டன் ஃப்ரேசர்
22.சிறந்த நடிகை – ’எவ்ரிதிங் எவ்ரிவேர் ஆல் அட் ஒன்ஸ்’ படத்திற்காக வென்றார் மிஷெல் யோவ்
23.சிறந்த திரைப்படம் – ”எவ்ரிதிங் எவ்ரிவேர் ஆல் அட் ஒன்ஸ்” திரைப்படம்
ஆஸ்கர் மேடையில் “நாட்டு நாட்டு” பாடலுக்கு நடனம்