ஆஸ்கர் விருதை வென்ற ‘அவதார்-2”

ஜேம்ஸ் கேமரூனின் ‘அவதார்: தி வே ஆப் வாட்டர்’ படம் சிறந்த காட்சி அமைப்புக்கான (Visual Effects) ஆஸ்கர் விருதை வென்றுள்ளது. 2023 ஆம் ஆண்டிற்கான 95வது ஆஸ்கர் விருது விழா மார்ச் 13…

ஜேம்ஸ் கேமரூனின் ‘அவதார்: தி வே ஆப் வாட்டர்’ படம் சிறந்த காட்சி அமைப்புக்கான (Visual Effects) ஆஸ்கர் விருதை வென்றுள்ளது.

2023 ஆம் ஆண்டிற்கான 95வது ஆஸ்கர் விருது விழா மார்ச் 13 ஆம் தேதியான இன்று அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெறவுள்ளது. ஒவ்வொரு முறையும் ஆஸ்கார் விருது வழங்கும்போதும் இந்தியாவிலிருந்து அதற்கான கூடுதல் எதிர்பார்ப்பு எழுவதுண்டு.

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஹாலிவுட்டின் பிரபல  டால்பி தியேட்டரில் இன்று இந்திய நேரப்படி  காலை 5:30 மணிக்கு தொடங்கியது.  அந்த வகையில்  இந்தியாவிலிருந்து “நாட்டு நாட்டு’ பாடல் , ஆல் தட் பிரீத்தஸ், தி எலிஃபன்ட் விஸ்பரர்ஸ் கிடைக்குமா என எதிர்பார்த்திருந்த நிலையில் ஆர்.ஆர்.ஆர் படத்தின் நாட்டு நாட்டு பாடல் மற்றும் முதுமலை யானைகளை பராமரித்து வரும் தம்பதிகள் குறித்த தி எலிஃபண்ட் விஸ்பரரஸ் ஆவணப்படம் ஆஸ்கர் விருதினை வாங்கியுள்ளது.

இந்த விருது வழங்கும் விழாவில் சிறந்த காட்சி அமைப்புக்கான (Visual Effects) ஆஸ்கர் விருதை ‘அவதார்: தி வே ஆப் வாட்டர்’ (Avatar: The Way of Water) படம் வென்றது. இந்த படத்தின் காட்சி அமைப்பாளர்கள் ஜோ லெட்டரி, ரிச்சட் பனிஹம், எரிக் சைண்டான் மற்றும் டேனியல் பெரிட் ஆகியோர் ஆஸ்கர் விருதை பெற்றுக் கொண்டனர்.

இதனையும் படியுங்கள்: ஆஸ்கர் விருதை தட்டி தூக்கிய நாட்டு நாட்டு பாடல்

உலகம் முழுவதும் அவதார் திரைப்படம்  பல ரசிகர்களை உருவாக்கியது. இதனைத் தொடர்ந்து  ஜேம்ஸ் கேமரூனின் அவதார் திரைப்படத்தின் 2 ஆம் பாகம்  அவதார் ”தி வே ஆப் வாட்டர்”  என பெயரிடப்பட்டு திரையில் வெளியாகி உலக ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை  பெற்றது.

இப்படத்தில் சாம் வொர்திங்டன், ஜோ சல்டானா, ஸ்டீபன் லாங் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 2009 இல் வெளியான அவதார் முதல் பாகத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து 13 ஆண்டுகளுக்கு பிறகு அவதார் இரண்டாம் பாகம் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது. ‘அவதார்: தி வே ஆஃப் வாட்டர்’ படம் தற்போது வரை இந்தியாவில் மட்டும் ரூ.450 கோடியை வசூலித்துள்ளது. உலக அளவில் ரூ.15,000 கோடியை தாண்டியுள்ளதாக  கூறப்படுகிறது.

இதனையும் படியுங்கள்: தமிழ்நாட்டில் படமாக்கப்பட்ட முதுமலை தம்பதிகள் குறித்த ஆவணப்படத்திற்கு ஆஸ்கர் விருது

இந்த நிலையில் 95வது ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் சிறந்த காட்சி அமைப்பிற்கான விருதினை ஆஸ்கர் விருது பெற்றிருப்பத்து அவதார் ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

– யாழன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.