இணையத்தில் வைரலாகும் நடிகர் அஜித்குமாரின் புகைப்படம்!

நடிகர் அஜித் தனது குடும்பத்தினருடன் இருக்கும் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.  பொங்கலை முன்னிட்டு கடந்த ஜனவரி 11 ஆம் தேதி வெளியான நடிகர் அஜித்தின் துணிவு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.…

நடிகர் அஜித் தனது குடும்பத்தினருடன் இருக்கும் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

பொங்கலை முன்னிட்டு கடந்த ஜனவரி 11 ஆம் தேதி வெளியான நடிகர் அஜித்தின் துணிவு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனையடுத்து துணிவு படம் கடந்த 8ஆம் தேதி தமிழ் மட்டுமல்லாமல், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்திஆகிய மொழிகளில் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

ஓடிடி வெளியீடுக்கு பிறகு இந்தப் படம் உலக அளவில் டிரெண்டானது. நெட்ஃபிளிக்ஸ் வெளியிட்டுள்ள இந்தியாவில் அதிகம் பார்க்கப்பட்ட டாப் 10 படங்களில் துணிவு ஹிந்தி பதிப்பு முதலிடத்தை பிடித்துள்ளது.துணிவு படத்துக்கு கிடைத்த வரவேற்பால் உற்சாகத்தில் இருக்கும் அஜித் உலக நாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டார். அப்போது எடுக்கப்பட்ட படங்கள் சமூக வலைதளங்களில டிரெண்டானது. துணிவு படத்துக்காக நீண்ட தாடியுடன் காணப்பட்ட அஜித் தற்போது தாடியின் அளவை குறைத்திருக்கிறார்.

இந்நிலையில் நடிகர் அஜித் விளையாட்டு மைதானத்தில் தனது குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. அதில் நடிகர் அஜித் மனைவி ஷாலினி, மகள் அனுஷ்கா, மகன் ஆத்விக் ஆகியோருடன் இருக்கிறார். இந்த புகைப்படத்தில் நடிகர் அஜித் பார்ப்பதற்கு என்னை அறிந்தால் திரைப்படத்தில் வருவது போல இருக்கிறார். இந்த புது கெட்அப் அடுத்த படத்திற்கான கெட்அப்பா? என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.