காசாவுக்கு மனிதாபிமான உதவிகளின் தேவைகள் மிக அதிகம் உள்ளது என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக உலக சுகாதார நிறுவனத் தலைவர் டெட்ரோஸ் அதானம் கேப்ரியேசஸ் எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதில் “ஐக்கிய நாடுகள் சபை மற்றும் எகிப்திய செஞ்சிலுவைச் சங்கம் ஆகியவற்றிலிருந்து உயிர்காக்கும் மனிதாபிமானப் பொருட்கள் ரஃபா எல்லை வழியாக 20 டிரக்குகளில் கொண்டு செல்லப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார். காசாவில் உள்ள 16 லட்சத்திற்கும் அதிகமான மக்களுக்கு மனிதாபிமான உதவி தேவைப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.







