கோவாக்சின் தடுப்பூசி; உலக சுகாதார அமைப்பு முக்கிய முடிவு

அவசர கால பயன்பாட்டிற்கு கோவாக்சின் தடுப்பூசியை செலுத்துவது குறித்து அக்டோபரில் முடிவு செய்யப்படும் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. சீனாவில் கடந்த 2019ம் ஆண்டு கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ், உலகம் முழுவதும் பரவி…

அவசர கால பயன்பாட்டிற்கு கோவாக்சின் தடுப்பூசியை செலுத்துவது குறித்து அக்டோபரில் முடிவு செய்யப்படும் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

சீனாவில் கடந்த 2019ம் ஆண்டு கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ், உலகம் முழுவதும் பரவி பெறும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. உலகளவில் கொரோனாவால் அதிக பாதிப்புகளை சந்தித்த நாடுகள் பட்டியலில் தொடர்ந்து அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. தடுப்பூசி மட்டுமே கொரோனாவை கட்டுப்படுத்த ஒரே வழி என்பதால் அனைத்து நாடுகளும் தடுப்பூசி செலுத்தும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. உலகம் முழுவதும் கோவிஷீல்டு, கோவேக்சின்,  பயாலஜிக்கல் இ, ஸ்புட்னிக் வி, ஸ்புட்னிக் வி, மாடர்னா போன்ற தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளன.

இந்தியாவின் பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்த கோவாக்சின், சீரம் இன்ஸ்டிட்யூட் தயாரிக்கும் கோவிஷீல்டு ஆகிய தடுப்பூசிகள் நாட்டு மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், கோவாக்சின் தடுப்பூசியை அவசரகால பயன்பாட்டிற்கு செலுத்துவது குறித்த விண்ணப்பத்தை உலக சுகாதார அமைப்பிற்கு கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி பாரத் பயோடெக் நிறுவனம் அனுப்பியது. இதுகுறித்த முடிவு அக்டோபரில் வெளியிடப்படும் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட கோவாக்சின் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் சர்வதேச பயணம் மேற்கொள்ள உலக சுகாதார அமைப்பின் அனுமதி முக்கியமானதாக கருதப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.