அதிமுகவில் யாருக்கு ஆதரவு ? – பாஜக தேசிய செயலாளர் பேட்டி

ஈரோடு இடைத்தேர்தலில் பாஜக அதிமுகவை ஆதரிக்கும். தேசிய தலைமையும் அண்ணாமலையும் யாரை அறிவிக்கிறதோ அதுதான் அதிமுக என பாஜக சிறுபான்மைப் பிரிவின் தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம் தெரிவித்துள்ளார். திண்டுக்கல் தனியார் மீட்டிங் ஹாலில்…

ஈரோடு இடைத்தேர்தலில் பாஜக அதிமுகவை ஆதரிக்கும். தேசிய தலைமையும் அண்ணாமலையும் யாரை அறிவிக்கிறதோ அதுதான் அதிமுக என பாஜக சிறுபான்மைப் பிரிவின் தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

திண்டுக்கல் தனியார் மீட்டிங் ஹாலில் பாஜக கிழக்கு மாவட்ட செயற்குழு கூட்டம்
கிழக்கு மாவட்ட தலைவர் தனபாலன் தலைமையில் நடைபெற்றது. இதில் பாஜக சிறுபான்மைப் பிரிவின் தேசிய செயலாளர் வேலூர் இப்ராகிம் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

அதன்பின் பாஜக சிறுபான்மைப் பிரிவின் தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது..

“திண்டுக்கல் மாநகராட்சியில் நடைபெறும் ஊழல்களை, பிஜேபி மாமன்ற உறுப்பினர் தனபால் வெள்ளையறிக்கை கேட்டதை தொடர்ந்து, அமைச்சர் ஐ பெரியசாமி வழிகாட்டுதல்படி, தனபால் வீட்டிற்கு சென்று உயிர்க்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தி உள்ளனர். மேலும் பொது மேடையிலே கொலை மிரட்டல் விடுத்தும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தனபால் உயிருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் தமிழக முதல்வர் ஸ்டாலின் பொறுப்பேற்க வேண்டும். மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறிய மாதிரி திமுக அடித்தால், பாஜகவும் திருப்பி அடிக்கும் என்பதை தெளிவுபடுத்துகிறோம். பாஜக மாவட்டத் தலைவர் தனபாலுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். குஜராத் கலவரத்தில் முஸ்லீம்களை கொல்லப்பட்டது போல் சித்தரித்து வீடியோக்களை ஒரு தனியார் தொலைக்காட்சி நிறுவனம் வெளியிட்டது.

இந்த கலவரத்தில் ஈடுபட்ட அனைவரும் கைது செய்யப்பட்டனர். அதன் பின்னரும் மத
கலவரத்தை தூண்டும் விதமாக ஒளிபரப்பிய தொலைக்காட்சி நிறுவனத்தை தடை
செய்துள்ளது. பாஜக அரசு சிறுபான்மையினருக்கு, கல்வி, பொருளாதாரத்தில் 3.3
சதவீதத்திலிருந்து 5.1 சதவீதமாக உயர்த்தி உள்ளது. 14 நலத்திட்டங்களை ஒதுக்கி
முறைப்படி வழங்கி வருகிறது. முஸ்லிம் பெண்களின் நலன் கருதி முத்தலாக் தடை சட்டம் கொண்டு வந்துள்ளது. உலகளாவிய வளர்ச்சியில் இந்தியா ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளது.

மதக் கலவரங்களை ஏற்படுத்தும் நோக்கில் வீடியோக்கள் வெளியிடுபவரை காவல் துறை உடனடியாக கைது செய்ய வேண்டும். வீடியோக்கள் வெளியிடுபவர்களை கைது செய்யாவிட்டால் ஆதாரங்களுடன் வெளியிடுவோம்.

ஈரோடு இடைத்தேர்தலில் அதிமுகவை தான் பாஜக ஆதரிக்கின்றது. தேசிய தலைமையும்,
அண்ணாமலையும் அறிவிப்பது தான் அதிமுக. வரும் 2024 பாராளுமன்ற தேர்தலில் மாவட்ட  அளவில் அடிப்படை கட்டமைப்புகளை செய்து வருகின்றோம். மேலும் திமுக
அமைச்சர்களின் ஊழல் பட்டியலை வரும் ஏப்ரல் மாதம் அண்ணாமலை வெளியிட உள்ளார்” என பாஜக சிறுபான்மைப் பிரிவின் தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம் தெரிவித்தார்.

யாழன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.