புதிய தலைமைச் செயலாளர், டிஜிபி யார்?: டெல்லி விரைந்த உயர் அதிகாரிகள்!

தமிழ்நாட்டின் புதிய தலைமை செயலாளர் மற்றும் டிஜிபி தேர்வு தொடர்பான ஆலோசனைக்காக உயர் அதிகாரிகள் குழு டெல்லி சென்றுள்ளது.  தமிழ்நாட்டின் தற்போதைய தலைமைச் செயலாளர் இறையன்பு வரும் 30-ம் தேதி ஓய்வு பெறுகிறார். அதேபோல் டிஜிபி சைலேந்திரபாபுவின் பதவிக்காலமும் அதே…

தமிழ்நாட்டின் புதிய தலைமை செயலாளர் மற்றும் டிஜிபி தேர்வு தொடர்பான ஆலோசனைக்காக உயர் அதிகாரிகள் குழு டெல்லி சென்றுள்ளது. 
தமிழ்நாட்டின் தற்போதைய தலைமைச் செயலாளர் இறையன்பு வரும் 30-ம் தேதி ஓய்வு பெறுகிறார். அதேபோல் டிஜிபி சைலேந்திரபாபுவின் பதவிக்காலமும் அதே நாளில் முடிவடைகிறது.  இதனையடுத்து புதிய தலைமைசெயலாளர் மற்றும் டிஜிபி யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்காக பல்வேறு பெயர்கள் ஏற்கனவே பரிந்துரைக்கப்பட்டுள்ளன.
இதுதொடர்பான ஆலோசனைக்கூட்டம் மத்திய அரசு பணியாளர் தேர்வு வாரியத்தில் இன்று நடைபெறுகிறது. இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்பதற்காக தலைமைச் செயலர் இறையன்பு, உள்துறை செயலாளர் அமுதா, டிஜிபி சைலேந்திர பாபு மற்றும் முக்கிய அதிகாரிகள் டெல்லி சென்றுள்ளனர்.
தலைமை செயலாளர் இறையன்பு சேலம் மாவட்டம் காட்டூரை சேர்ந்தவர். 1963ஆம் ஆண்டு பிறந்த இவர், நாகப்பட்டினம் உதவி ஆட்சியராக இருந்த போது நாகப்பட்டினம் மாவட்டத்தை இரண்டாகப் பிரிப்பதிலும், வெள்ள நிவாராணப் பணியிலும் முக்கியப் பங்காற்றியவர். பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்த இவர்,  திமுக ஆட்சி அமைந்ததும் தலைமை செயலாளர் பதவியில் அமர வைக்கப்பட்டார்.
இதேபோல் டிஜிபி சைலேந்திரபாபு  36 ஆண்டுகால காவல்துறை பணியை நிறைவு செய்கிறார். இவர் கடந்த 1987ஆம் ஆண்டு ஐபிஎஸ் பேட்ச்சை சேர்ந்தவர். .ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி அமைந்ததும், கடந்த மே 2021ல் தமிழ்நாட்டின் டிஜிபியாக நியமனம் செய்யப்பட்டார். இரண்டு ஆண்டுகள் பணியாற்றிய இவர், ஓய்வு பெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.