சென்னைக்கு கடத்திவரப்பட்ட 1,760 கிலோ கஞ்சா பறிமுதல்: அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை!

தேசிய போதை பொருள் தடுப்பு பிரிவு மற்றும் ஆந்திர காவல்துறை இணைந்து நடத்திய கூட்டு நடவடிக்கையில் 1760 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு பல நாட்களாக தேடப்பட்டு வந்த மாவோயிஸ்ட் கைது செய்யப்பட்டனர். சென்னைக்கு…

தேசிய போதை பொருள் தடுப்பு பிரிவு மற்றும் ஆந்திர காவல்துறை இணைந்து நடத்திய கூட்டு நடவடிக்கையில் 1760 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு பல நாட்களாக தேடப்பட்டு வந்த மாவோயிஸ்ட் கைது செய்யப்பட்டனர்.

சென்னைக்கு போதைப் பொருள்கள் கடத்தி வருவதாக ரகசிய தகவல் கிடைத்தன்.
அடிப்படையில் தென்மண்டல போதை பொருள் தடுப்பு பிரிவு இயக்குநர் அரவிந்தன் தலைமையில், சென்னை – நெல்லூர் சுங்கச்சாவடி அருகே போலீசார் வாகன  சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அங்கு வந்த கார் ஒன்றை மடக்கி சோதனை செய்தபோது அதில் 160 கிலோ அளவிலான கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து அந்த காரில் பயணித்த 3 பேரை போதை தடுப்பு பிரிவு அதிகாரிகள் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது அவர்களில் சைக்கம் கிரண்குமார், கள்ள சிவக்கோட்டையா என்கிற
ஆந்திரா மாநிலத்தைச் சேர்ந்த இருவரும், கிருஷ்ணகிரி மாவட்டத்தையும் சேர்ந்த சுரேஷ் என்பவரும் கடத்தலில் ஈடுபட்டது தெரியவந்தது. மேலும், இந்த போதை பொருளானது ஆந்திர – ஒரிசா மாநில எல்லையில் இருந்து கொண்டுவரப்பட்டதாக தெரிய வந்தது. இதனையடுத்து தனிக்குழு அமைத்த போலீசார் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள அரக்கு மலை பாடேறு என்னும் இடத்தில் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து நடைபெற்ற புலன் விசாரணையில் கின்னெகருவு என்ற கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் பல மூட்டைகளின் கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. மேலும் அங்கு மாவோயிஸ்ட் நடமாட்டம் அதிகம் இருப்பதாகவும் கூறப்பட்ட நிலையில் ஆந்திர மாநில காவல்துறை உதவியுடன் தேசிய போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் இணைந்து அந்த மலை கிராமத்தை சுற்றி வளைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது முக்கிய குற்றவாளியான சுந்தர் ராவ் (39) என்கிற மோஹன ராவ் வீட்டிலிருந்து சுமார் 1760 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் அவர் மீது சட்டவிரோத செயல்பாடுகள் தடுப்பு சட்டம் மற்றும் வெளி பொருள் பயன்படுத்தியது போன்ற முக்கிய பிரிவுகளின் கீழ் வழக்குகள் நிலுவையில் உள்ளது விசாரணையில் தெரியவந்தது.

ஒரிசா மாநிலம் மால்கஞ் மாவட்டத்திலிருந்து கஞ்சாவை அதிக அளவில் வாங்கி தமிழ்நாடு மற்றும் அதனை சுற்றியுள்ள மாநிலங்களில் விற்பனை செய்வதற்காக பதுக்கி வைத்திருப்பது போலீசாரின் விசாரணையில் தெரிய வந்தது.

ம. ஶ்ரீ மரகதம்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.